Friday, June 9, 2017

பிரியமுள்ள முஹம்மதுக்கு... - part 2

ஒரு முன்னுரை
Image result for anna rohleder
ஓர் எழுத்தாளர் என்றே என்னைப் பற்றிப் பொதுவாக நான் சொல்லிக் கொள்வதுண்டு. ஆனால் இக்கடிதங்களைப் பொருத்த வரை நான் ஒரு பேனா என்று சொல்வதே சரியாக இருக்கும். அவை ஓர் அன்பளிப்பு. ஆகஸ்ட் 2015-ல் டார்ஸெட் தியான முகாமில் கடைசி நாளின் அதிகாலையில் அருட்கொடையாய் வந்த உள்ளுணர்வில் முதன் முதலில் தரிசிக்கப்பட்டவை, முகாமிற்குப் பின் நான் லண்டனிலும் பிறகு லூயிஸ்வில்லிலும் இருந்த வாரங்களில் தனித்தனி கடிதங்களாக விரிந்தன. அவற்றை நான் எழுதியது யாரோ சொல்லச் சொல்ல எழுதுவது போல் தோன்றிற்று, சில நேரங்களில் அக்குரல் கிசுகிசுப்பது போன்றும் சில நேரங்களில் ஓசையற்றும்.
இங்கே அந்த அருட்பொழிவின் சத்தியத்தையும் அழகையும் நீங்கள் எவ்வளவாவது உணர்கிறீர்கள் எனில் அது அந்த தெய்வீக வள்ளண்மை தான் அறியப்பட வேண்டுமெனும் நாட்டத்தினால் தருவதேயாகும். ஏதேனும் பிழைகளோ தவறுகளோ புலப்பாட்டில் குளறுபடிகளோ இருப்பின் அவை முழுக்க முழுக்க எனது குறைபாடுகளினால் ஏற்பட்டவையே.
இக்கடிதங்களை எழுதித் தொகுப்பதிலும் உணர்வுகளைச் சொற்களில் நிரப்புவதிலும்  என் நோக்கம், நான் அனுபவித்ததும் தம்மளவில் அருட்கொடைகளுமான, நமது இறைத்தூதர் (ஸல்) அவர்களின் ஒப்பற்ற பிராகசமும் அரவணைப்பையும் உங்களுடன் பகிர்ந்து கொள்வதே. எட்டமுடியாத அல்லது வாழ்வினும் பெரிதான ஆளுமையாய் இருப்பதைவிட்டும், மனித ஆளுமையாய் அவரை அணுக முடிகின்ற நிலைதான் பெரிதும் அகத்தூண்டல் தருபவராய் அவரை ஆக்குகிறது. அவரொரு மனிதரும் இறைத்தூதரும் ஆவார். அவரை இங்கே நான் ”மீம்” என்று அழைப்பேன். அந்த முஹம்மதின் மீது நான் காதலானேன்.
அன்னா ருஹ்லிதர்.
லூயிஸ்வில்                      
11 டிசம்பர், 2015.


No comments:

Post a Comment