உன் சமூகம்
எனக்கு
முன்னும் பின்னும்
இடமும்
வலமும்
மேலும்
கீழும்
என்னிலுமாய்
என்னுடன் செல்கிறது
எத்திசையிலும்
தூர அளவேதும்
இல்லை நினக்கு
சரியாகச்
சொன்னால்
திசைகள் என்பதே இல்லை
கேட்கவோ
தேடவோ
தட்டவோ
இல்லை நான்
வெறுமனே
பார்த்திருந்ததில்
அகப்பட்டுவிட்டாய் நீ
கூடுகளின்
மகிமை அறிந்தவனே
கூண்டுகளை
உடைக்கிறான்
நின்
காதலின் ஸ்பரிசத்தால்
எனது
கூண்டே ஒரு கூடாயிற்று
ஒரு குழந்தையினது போல
வார்த்தை
மாம்சமானது
அர்த்தம்
அழகாயிற்று
கால நியதியில்
சொல்
மரூஉ ஆனபோதும்
அர்த்தம் அதுவேதான் அல்லவா?
மௌனமாய்
அரும்பியிருத்தல்
ஒவ்வொரு
சமயம்
ஒரு யுவதியின்
நகிலென
கசிந்துருகித்
தொழுதல்
ஒவ்வொரு
சமயம்
ஒரு தாயின் முலையென
கன்னமே
இல்லாதவன்
பெறாமல்
போகலாம்
அறைகளேதும்
இழந்து
போகிறான் அவன்
முத்தங்களை எல்லாம்
மனிதகுமாரன்
(பனீஆதம்)
அப்பத்தால்
மட்டுமே ஜீவிப்பதில்லை
என்னும்
ஞானத்தைச்
சுவைத்துக்கொண்டிருக்கிறேன்
இந்த
நோன்பு மாதத்தில்
No comments:
Post a Comment