ஞாலம்
யாவும்
ஞானத்தில்
தாங்குவோன்
காலத்தில்
வைத்துக்
கருதினான் என்னை.
நித்தியன்
நித்தமும்
சத்தினில்
தீண்டலால்
கோர்வைத்
தருணங்கள்
நேர்வன ஆயின.
அதன்பெயர்
வாழ்க்கை
அதன் களம் யாக்கை.
மூன்று
உலகங்கள்
தோன்று
தலம் ஆனேன்
மனிதன்
என்றொரு
புனிதப் பெயர் ஈந்தனன்.
என்னுள்
கண்டேன்
தன்னின்
சின்னங்கள்
கவிதைகள்
ஆகும்
சவிமிகு எண்ணங்கள்.
மை எனது
அகம்
எழுத்து
எனது புறம்.
குறிப்பு:
சவி என்றால் ஒளி என்று பொருள். “சோதிமிகு நவ
கவிதை” என்று பாரதி சொன்னார். அதையே ’சவிதை’ என்றேன்.
No comments:
Post a Comment