மழை
பெய்கிறது
வாருங்கள்
என்றழைத்தாள்
எத்தனை
முறை ஆனாலும்
பித்தனைப்
போல்
மழையை
ரசிப்பேன்
என்பதறிவாள்
கணினியை
மூடினேன்
வாசற்படியில்
இருவரும்
அமர்ந்துகொண்டோம்
வேறேதோ
புதிய இடம் போல்
வேறேதோ
பழைய காலம் போல்
சித்தத்தில்
மழை
தித்தித்தது
எப்போது
வரினும்
இடத்தின்
தடத்தையும்
காலத்தின்
குறிப்பையும்
துடைத்தழிக்கின்றது
மழை எனக்கு
தூறல்
கிளர்த்தும்
ஈர
வாசத்தில்
ஒருவித போதை
விண்ணும்
மண்ணும்
விளையாடும்
பெருமுயக்கு
அல்லவோ
மழை
நேராக
மேகம் அனுப்பும்
அமிர்தத்
துளிகளை
திசைகளில்
எல்லாம்
சிதறடித்திருந்தது
கடுங்காற்று
’மழை
வந்தாப்லதான் போங்க
காத்து
கலைக்குது
நான்
உள்ளே போறேன்’
என்றெழுந்து சென்றாள்
அழகிய
மழையைக்
கலைத்தபடிச்
சுழன்றடிக்கும்
அழகிய
காற்றை
ரசிக்கத்
தொடங்கினேன்
அருமை
ReplyDelete