Friday, August 10, 2018

புதிய சொற்காலம்


Image result for tamil words

களம் கண்டார் அன்று
அண்ணன்
களமாடுகிறார் இன்று

முன்பெல்லாம் தலைவர்
சொற்பொழிவு ஆற்றினார்
இப்போதெல்லாம் நிகழ்த்துகிறார்
உரை வீச்சு
(தொண்டர் குழாம் அறிந்ததெலாம்
வீச்சறிவாள்
வீச்சுப்புரோட்டா)

நேற்றெல்லாம்
இதழ்களில் ஏடுகளில்
மடல்கள் தீட்டினார்.
இற்றை நாட்கள்
ஊடக உலகமாதலால்
பதிவிடுகின்றார்

வாசகர் வட்டம்
தலைகளோ சதுரம்.
பருந்துப் பார்வை
முக்கோணம்.
விமர்சனம் எல்லாம்
குறுக்கு வெட்டுத் தோற்றம்

’கூடுகை’களில் நிகழ்கின்றன
கதையாடல்கள்
சொல்லாடல்கள்

எம் தோழர் ஒருவர்
செய்கிறார் நாளும்
பரப்புரை

புதிய சொற்கள்
ஒளிவீசும் காலத்தில்
கொடுத்து வைத்தவர்களாய்
வாழ்கிறோம் கண்டீர்!


No comments:

Post a Comment