Tuesday, August 14, 2018

மறதி வரம்





























பிரசவத்தின் காயம்
இன்னமும் ஆறாமல்
ஓடிக்கொண்டிருந்த
அந்த நாயைக் கண்டு
முகம் சுளித்துவிட்டோம்
ஆட்டொவிலிருந்த எல்லாரும்

அந்நிறம்
ஒரு மலருக்குரியதாய் இருந்தபோதும்
அவ்வடிவு
ஒரு கனிக்கு உரியதாய் இருந்தபோதும்
ரசிக்கமுடியாமல்
அருவருப்பின் கூச்சமொன்று
தேகமெங்கும் நெளிந்தது

அந்த எதிர்ப்பாராக் காட்சி
போய்க்கொண்டிருக்கும்
’பர்த்டே பார்ட்டி’யை
முற்றிலும் பாழாக்கிவிடுமோ
என அஞ்சினோம்

மறத்தல் வேண்டி
மனதைத் திசைமாற்றி
ஏதேதோ பேச்செடுத்தோம்

”அல்லாஹ்தான்
மறக்கடிக்க வேண்டும்”

பிறிதேதும் நினையாது
மறதி ஒன்றையே பெருவரமாய்
அத்தருணத்தில்
யாசித்தோம்

தனது குட்டிகளின்
பிறந்தநாள் பரிசைச்
சுமந்தபடி ஓடிக்கொண்டிருந்த
அத்தாயின்
முகம் பார்க்க மறந்துவிட்டோம்

1 comment:

  1. very wonderful observation. we all although some are normal, first feel the aversion only. then we may feel the pain the dog is undergoing. Is this due to circumstances? or our way of brought up?

    ReplyDelete