Monday, October 10, 2011

நக்கல்ஸ்...

கிளிண்டன்: ஆருலே அது அங்க வாரது? அடிக்கடி பாத்த மொவமாட்டுல இருக்கு?
புஷ்: அட ஆமாங்கண்ணே(ன்) , நல்லா மொறச்சுப் பாருங்க, அது நம்ம பயபுள்ள ஒபாமாத்தே(ன்) 
கிளிண்டன்: எலே ஒபாமா, என்னலே இது கோலம், 'தேவர் மவன்' கமலு கணக்கால்ல மாறிப்புட்ட! 
ஒபாமா: எல்லாம் ஒரு விசயமாத்தாண்ணே. 
புஷ்: விஷயம் என்னன்னு சட்டுபுட்டுன்னு சொல்லுலே, ஆர்வக் கொடச்சல் தாங்க முடியல
ஒபாமா: அண்ணே, அதெல்லாம் சொன்னா வெளங்காதுண்ணே, இந்த போட்டாவ பாருங்க தானா வெளங்கும்.
(ஒபாமா தன சட்டைப் பையிலிருந்து ஒரு புகைப்படத்தை எடுத்துக் காட்டுகிறார்.கிளிண்டனும் புஷ்ஷும் பார்த்து ஆச்சரியப் படுகிறார்கள்.)


  கிளிண்டன்: அட என்னலே இது, ஒலகத் தமிழர்களின் கேப்டன்ல உட்காந்திருக்காரு?
ஒபாமா: ஆமாண்ணே, அவரு கொடுத்த ஆதரவுலதேன் இப்ப என் ஆட்சியே ஸ்டெடியா இருக்குது. அதான் பாத்தேன், அவரு மாதிரி ஒரு வீரமான பயபுள்ள எனக்கு மவனா இருந்தான்னா எனக்கும் ஒரு பெருமைதேன், நாட்டுக்கும் ஒரு அருமைதேன்னுட்டு நேரா தமிழ்நாட்டுக்குப் போயி ஒரு பரிசம் போட்டுட்டேன்.

பொதுவாக நான் பேஸ்புக் பக்கம் தலை காட்டுவதில்லை. என் மனைவி அதில் சொந்த பந்தங்களுடன் உரையாடிக் கொண்டிருப்பாள். என் மச்சான் மார்கள் தம்பிகள் மருமக்கள் என்று ஒரு கல்லூரிப பட்டாளமே இருக்கிறது. அவர்கள் எவ்வளவு கிரியேட்டிவாக இருக்கிறார்கள் என்பதற்கு ataiyaalamaakap பல படங்கள் கிடைத்தன. பார்த்து சிரித்து வயிறு வலித்தது. என்னவொரு நக்கலான க்ரிடிசிசம். அத்துடன் என் கற்பனையை சேர்த்து மேலே கொடுத்தேன். கீழே உள்ளவை அவர்களின் கைவண்ணம்.




புரட்சிக் கலைஞர் in  and  as சிலந்தித் தலைவன் !

 
 மூன்றெழுத்தில் நம் மூச்சிருக்கும் !






1 comment: