Tuesday, October 18, 2011

கூழாஞ்சொல்





நதியின் கரைகள்
நம் சொற்கள்

நம் சம்பாஷனை
குறுக்கெழுத்து உரையாடல்

உன்னொரு வார்த்தை
உக்கிரத் தீயினைச்
சூல்கொண்ட பொறியாய்
காட்டில் விழும்

உன் வார்த்தைகள்
சமவெளி செழிக்க
மழையின் தாரைகளாய்க்
கொட்டித் தீர்க்கும்

உன் சொற்கள்
உன் சிந்தனையின்
காலக் குறிப்புக்கள் மட்டுமே

உன் வாய்
உன் கண்களின்
மொழிபெயர்ப்பாளன்.

உன் கண்கள்
தாய்மொழி பேசுகையில்
மொழிபெயர்ப்பு சாத்தியமாவதில்லை.

மந்திரங்கள் ஏதும் அறியாய்
நீ
மனம் நிறைந்து பேசுவதே
மந்திரம்

தொடர்புள்ளிகளும்
கால் அரைப் புள்ளிகளும்
உன் முக பாவனையின்
விண்மீன்கள்

காதலில் கனிந்த
உன் வார்த்தைகள்
கிளைகளிலேயே வெடித்திருக்கும்
மாதுளைகள்

ஆவிச் சொற்களில்
இதயத்தின் நறுமணம்
பிரார்த்தனை

உன் சொற்கள்
தம் தாகம் தணிக்கும்
நீரை விட்டு
வெளியேறுவது ஏன்?


5 comments:

  1. மந்திரங்கள் ஏதும் அறியாய்
    நீ
    மனம் நிறைந்து பேசுவதே
    மந்திரம்

    ஆவிச் சொற்களில்
    இதயத்தின் நறுமணம்
    பிரார்த்தனை

    அற்புதமான வரிகள்.மனம் திறந்த பாராட்டுக்கள்

    ReplyDelete
  2. ரொம்ப நல்ல கவிதையா இருக்கும்ன்னு நினைக்கிறேன் ஏன்னா எனக்கு புரியலையே...

    ReplyDelete
  3. ராக் ஸ்டார் எனும் படத்தின் பாடலை கேட்குமாறு வேண்டுகிறேன்.

    சத்தா ஹக்

    இந்த பாடல் ரஹ்மான் பாய் ‘குன் ஃபயகூன்” என்ற குரான் ஷரீஃபின் வரிகள்

    ReplyDelete
  4. http://www.youtube.com/watch?v=GGUiQ1_IR9s

    I am dissolving here...

    ReplyDelete
  5. Hope you will like this documentary:

    http://www.cultureunplugged.com/documentary/watch-online/filmedia/play/2480/Give-Me-Your-Love

    ReplyDelete