இப்போதெல்லாம்
வெண்மையை
மட்டுமே
தொடுகின்றது
அவனின் தூரிகை
ஒரு
யோகம் போல்
வெள்ளைத்
திரையில்
வெண்மையை
மட்டுமே
தீட்டுகின்றான் அவன்
கேன்வஸ்
போலவே
காட்சி
தரும்
ஓவியத்தின்
முடிவில்
பேரமைதியின்
களிப்பில்
ஆழ்ந்து போகிறான்
தூய
நிறத்தைத்
தேர்ந்து
கொண்டீர்
ஓவியரே!
ஒளியைத்தான்
வரைகின்றீரோ?
என்றேன்
ஆனந்தக்
கடல் முகத்தில்
சோகத்தினொரு
திவலை காட்டி
சொன்னார்:
தூய
ஒளியை
வரைய
முடியாது எவரும்
ஆதலால்
ஒளியின்
ஆடையை
வரைகின்றேன்
நான்.
ஆஃப்கன் சூஃபி ஞானி Hakim Sanai: The Hadiqa ஹடிகாத் தோட்டம்’ அறிய விரும்புகிறேன்,தாங்கள் உதவ முடியுமா.
ReplyDelete