Sunday, September 9, 2018

நீ கிடைத்தபோது





















அஞ்சினேன் நான் என்னையே
நீ கிடைத்தபோது

நல்லுரை நீயெனிலோ
கவியாக்க முயல்வேன் என்று

நறுங்கவிதை நீயெனிலோ
இசையாக்க முயல்வேன் என்று

மெல்லிசை நீயெனிலோ
தியானமாக்க முயல்வேன் என்று

அஞ்சினேன் நான் என்னையே
நீ கிடைத்தபோது

நல்லூழ் வேறாய் இருந்தது
நினையாதன எல்லாம் நடந்தது

ஞானநூல் நீயானாய்
நல்லுரை நானானேன்

பெருங்கனவு நீயானாய்
நறுங்கவிதை நானானேன்

மௌனம் நீயென நின்றாய்
தியானம் நானென ஆனேன்


1 comment:

  1. நினைவெனும்

    மது அருந்தி

    கனவெனும்

    கருந்துளை ஊடே

    பயணிக்கிறேன் நான்

    எனக்கு

    அலங்காரமும் 

    தேவையில்லை

    ஆடைகளும்

    தேவையில்லை

    நீயே 

    நான் விரும்பும் 

    ஆடை

    உன்னுள் ஒளிந்து கொள்கிறேன்

    கருப்போ வெண்மையோ 

    சிகப்போ பச்சையோ

    கந்தலாடையோ

    பட்டாடையோ

    எனக்கு எந்த ஆடையும்

    வேண்டாம்

    உடை மாற்றங்கள்

    அலுத்துவிட்டது

    ஒளிக்கு எதற்கு ஆடை

    நிர்வாணமே ஒளிக்கு அழகு

    இருளுக்கு ஏன் மறைப்பு

    அதுதான் ஒளியை அழகாக்குகிறது

    ஒளி-சத்தியம்

    சத்தியம்-ஒளி

    ஒரே பொருளுக்கு

    இரண்டு பெயர்கள்

    காதலில்

    நிர்வாணமாவது

    அலங்காரமாவது

    இரண்டும் வேறல்ல

    இருளில் தானே

    ஒளி பிறக்கிறது

    இருளுக்கு ஏன் மறைப்பு

    பிதற்றல்களும்

    முனுமுனுப்புகளும் தான்

    என் பாடல்கள்

    பிரபஞ்ச கடலில்

    வாழ்வெனும் சூறாவளியின்

    ஊடே

    கலங்கரை விளக்கை

    தேடும்

    பாய்மரக் கப்பல் நான்

    கடற்கரை மணலை

    எண்ண துடிக்கும்

    முட்டாள்தனம் எனது

    உன்னை நினைக்கும்

    அந்த நொடிதான் என் வாழ்வு

    உன்னை நினையாதிருக்கை

    என் மரணபடுக்கை
     -ஜேபி

    ReplyDelete