2. ஷைக் ஹிஷாம் கப்பானி
தமிழில்: ரமீஸ் பிலாலி
இறைவனிடம் நீங்கள் உடைந்த உள்ளத்தையும்
பணிவையும் காட்டவில்லை என்றால் இறைஞானம் உங்களிடம் வரவே வராது.
இதை இறைவன் வேறு வார்த்தைகளில் நமக்கு
நினைவூட்டுகிறான், “கர்வம் கொள்ளாதீர்கள். நான் எனது கைகளால் படைத்த எனது
அடியார்களில் எவரைக் காட்டிலும் நீங்கள் சிறந்தவர் என்று எண்ணாதீர்கள். நீங்கள்
அவர்களைப் போன்றவர்கள். அவர்கள் உங்களைப் போன்றவர்களே. வித்தியாசம் ஏதுமில்லை.
ஓர் ஆண் ஆண்தான், ஒரு பெண் பெண்தான்.
அல்லாஹ் மூன்றாம் பாலினத்தைப் படைக்கவில்லை. விலங்குகளின் இடையில் ஏதுமில்லை;
மனிதர்களின் இடையில் ஏதுமில்லை.
நுட்பமான
உயிர்கள் இருக்கின்றன என்பதை நாம் புரிந்துகொள்கிறோம். ஆனால் நாம் அனைவரும் சமமானவர்கள்,
நபி (ஸல்) சொன்னதைப் போல: ”சீப்பின் பற்களைப் போல, மனிதர்கள் சமமானவர்களே”
(அந்நாஸு சவாஸியத்தன் க-அஸ்னானில் மஷ்த்).
அனைவரும் சமம்தான், எவரும் எவரை விடவும்
உயர்ந்தவர் அல்லர். நாம் இந்த சமத்துவத்தைக் காட்டும்போது வெற்றி அடைவோம். எனவே,
சமத்துவத்தைக் கற்பிக்கும் ஒரு குருவைத் தேடுங்கள். சொல்லப்போனால், மற்ற
அனைவரையும்விட நீங்கள்தான் தாழ்வானவர் என்று உணர்த்துகின்ற குருவைத் தேடுங்கள்.
ஏனெனில், உங்களின் குருவால் உங்களின் தன்முனைப்பு (ஈகோ) நொறுக்கப்படும்போது
உங்களுக்கு உடைந்த இதயம் கிடைக்கும். உங்களின் தீய ”நான்”-ஐ அவர் நொறுக்கி உங்களின்
நல்ல “நான்”-ஐ வெளியாக்குவார்; உங்களின் மிருகத் தன்மைகளை இல்லாமல் ஆக்கி உங்களை
அல்லாஹ்வின் பாதைக்கு இட்டுச் செல்வார்.
No comments:
Post a Comment