Friday, November 2, 2012

அசல்கள்




இவ்வுலகில்
மனிதர்கள் என்று பலருண்டு
அவர்களில்
மனிதர்கள் எத்தனை பேர்?

இவ்வுலகில்
ஆண்கள் என்று பலருண்டு
அவர்களில்
ஆண்கள் எத்தனை பேர்?

இவ்வுலகில்
பெண்கள் என்று பலருண்டு
அவர்களில்
பெண்கள் எத்தனை பேர்?

இவ்வுலகில்
கவிஞர்கள் என்று பலருண்டு
அவர்களில்
கவிஞர்கள் எத்தனை பேர்?

இவ்வுலகில்
ஞானிகள் என்று பலருண்டு
அவர்களில்
ஞானிகள் எத்தனை பேர்?

இவ்வுலகில்
குழந்தைகள் உண்டு பல
அத்தனையும்
குழந்தைகளே!

1 comment:

  1. குழந்தையை போலவே அழகு இந்த கவிதை, மிகவும் பிடித்து இருக்கிறது..
    ஏதோ என்னால் முடிந்தது..

    இவ்வுலகில்
    வலைப்பதிவாளர்கள் என்று பலருண்டு
    அவர்களில்
    வலைப்பதிவாளர்கள் எத்தனை பேர்?

    ReplyDelete