Wednesday, October 24, 2018

மனனப் பாடல்
























அந்த ஏழு வயதுச் சிறுமியின்
நடையையே சற்று மாற்றிவிட்டது
பிறந்தநாள் புத்தாடை.

முகத்திலொரு ஆனந்த மலரினைப்
புன்னகையாய்ச் சுமந்தபடி
ரொம்பவும் பவிசுக் காட்டிக்கொண்டு
பள்ளிக்குப் போகிறது,

இன்றொருநாள்
அனைவரும் மனனமிடும் பாடலாய்த்
தானாகிவிட்டது போல்.

No comments:

Post a Comment