Saturday, September 14, 2019

ஆவென ஆவேனோ?

 நல்லான் தீம்பால் நனி கசிய...” என்னும் கட்டுரையின் முடிவில் ’அப்துல் ரகுமான் அவர்கள் அருள் என்னும் அமலப் பால் அருந்திய ஆன்மிகர்’ என்று குறிப்பிட்டிருந்தேன்.
      
 அமலப் பால் என்றால் என்ன? தூய பால். அழுக்குப் படாத பால்.

      தூய பால் என்றே நேரடியாகச் சொல்லலாமே? அதை விடுத்து அமலப் பால் என்று நேரற்றுச் சொன்னது ஏன்? என்றொரு கேள்வி எழுந்தது.

      அக்கட்டுரை பசு மற்றும் பால் ஆகிய ஆன்மிகக் குறியீடுகளைப் பற்றிப் பேசியது. பசு என்பது ஆன்மாவையும் பால் என்பது ஞானத்தையும் குறிப்பன என்று விளக்கி எழுதப்பட்டது. எனவே, ஆணவம் கன்மம் மாயை ஆகிய மும்மலங்கள் நீங்கிய தூய அறிவு என்னும் பொருளும் தொனிக்கும் வண்ணம் அமலப் பால் என்று குறிப்பிட்டேன்.

      மட்டுமன்று, பசுவின் மடி பால் சுரத்தலைப் பற்றிப் பேசும் திருக்குர்ஆன் வசனமும் நினைவில் நின்றது:

      ”கால்நடைகளில் உமக்கொரு கல்வி உளது.
      சாணிக்கும் குருதிக்கும் இடையில்
      அதன் வயிற்றிலிருந்து உமக்குத்
      தூய பாலினைப் புகட்டுகின்றோம்;
      அருந்துவோர்க்கு ஆனந்தம் ஆவது.”
      (16:66)

      சாணம் மற்றும் ரத்தம் ஆகியவற்றால் அழுக்காகி விடாமல் வெளியாகும் தூய பால். எனவே அது அமலப் பால்.

      ஆன்மா என்னும் பசு உலகப் பற்றுத் தளைகளான பாசம் விட்டு விலகி படைத்த இறைவனிடம் திரும்ப வேண்டும் என்று குறியீடாக ஆன்மிகம் பேசுகிறது சைவ சித்தாந்தம்.

      அ என்னும் தமிழ் எழுத்தின் வடிவம் பசுவின் முகம் என்ப.

      அதனை அடுத்து எழுந்த ஆ என்பது தலையுடன் வால் சேர்ந்த வடிவம். அதாவது முன் பக்க அடையாளம் தலை, பின் பக்க அடையாளம் வால் என முழுப் பசுவையும் குறித்தது. அதனால் ஆ என்னும் சொல்லின் பொருள் பசு என்றாயிற்று.

      அ என்பது எழுத்து. ஆ என்பது சொல். அது குறிக்கும் பொருள் பசு. குறியீடாக ஆன்மா.

      அடுத்த எழுத்து இ. அது இறைவனைக் குறிக்கிறது. எழுத்தறிவித்தவன் இறைவன் என்பதை ஆன்மா அறிதல் வேண்டும்.

      பசு பதியிடம் திரும்ப வேண்டும். அதாவது, ஆன்மா இறைவனிடம் திரும்ப வேண்டும். அந்நிலையே ஈடேற்றம். ஈ என்பது ஈடேற்றம். அதனை இறைவன் ஆன்மாவுக்கு ஈகின்றான். அவனது பக்தியில் ’ஈ’யின் தலை அளவு கண்ணீர் சொரிந்தார்க்கும் அருள்கிறான் என்பது நபிமொழி ஒன்றின் கருத்து. ஈயொன்றின் ஒரு சிறகு அளவுக்கேனும் மதிப்பில்லாதது இவ்வுலகு என்பது இன்னொரு நபிமொழியின் கருத்து. அத்தகையை இழிந்த உலகை விட்டு இறைவனிடம் திரும்புகின்ற ஆன்மாவுக்கு ஈடேற்றம் ஈகின்றான்.

      இனி, அறபி எழுத்துக்கள் கொண்டு இவ்விளக்கம் புகல்வாம்.

      அலிஃப் என்பது அல்லாஹ்வைக் குறிக்கும் (அதன் வடிவம் ஒன்று என்னும் எண்ணின் வடிவமுமாம். இறைவன் ஒருவன் என்பதைக் குறிக்கும். அதன் எழுது முறை மேலிருந்து கீழாம். அவன் அருளால் உலகங்கள் யாவையும் தோன்றியதைக் குறிக்கும். அதனை சூஃபிகள் ‘தனஸ்ஸுலாத்’ என்பர். எண்ணும் எழுத்தும் அறிவித்த இறைவன் ஒருவனே எனலுமாம்).

      பசு என்றும் பதியின் முன்னிற்க வேண்டும். அலிஃப் என்னும் எழுத்தினை அடுத்து பே / பா என்னும் எழுத்து. அது ”ப(க்)கரா” (பசு) என்பதைக் குறிக்கிறது.

திருக்குர்ஆனின் முதல் அத்தியாயம் “அல்-ஃபாத்திஹா” (திறப்பு). அதன் ஏழு திருவசனங்கள் மூன்று நிலையின. முதல் மூன்று திருவசனங்கள் இறைவனை அறிமுகஞ் செய்கின்றன. நான்காம் திருவசனம் இறைவனுக்கும் அடியார்க்கும் உள்ள உறவைக் கூறுகிறது. அடுத்த மூன்று வசனங்கள் அல்வழிப் படாது காப்பு. (பதியைப் பசு அணுகுதல் நேர்வழி. அது பாசத்தால் வழி தவறிப் போய்விடாமல் அவனே காக்கிறான்).

திருக்குர்ஆனின் இரண்டாம் அத்தியாயம் ”அல்-பகரா” (பசு) என்பதையும் ஓர்க.

அறபி மொழியின் மூன்றாம் எழுத்து தே / தா. அது ”தவ்பா” (திருப்பம்) என்பதைக் குறிக்கிறது. ஆன்மாவாகிய பசு அல்லாஹ்விடம் திரும்புதல்.

அறபி மொழியின் நான்காம் எழுத்து “த்ஸெ” என்பது. இது, “ஸவாப்” (நற்கூலி) என்பதைக் குறிக்கும். பதியிடம் திரும்பிய பசுவுக்கான நல்லருள், சன்மானம்.

அறபி மொழியின் ஐந்தாம் எழுத்து ”ஜீம்”. இது, ’ஜன்னத்’ (சொர்க்கம்) என்பதைக் குறிக்கும். அதாவது வீடு பேறு, பரமபதம். இதுவே திரும்பிய ஆன்மா அடையும் நற்கூலி.

அறபி மொழியின் ஆறாம் எழுத்து “ஹே”. இது, ’ஹம்து’ (புகழ்) என்பதைக் குறிக்கும். அதாவது, ஆன்மா எப்போதும் இறைப்புகழின் அமுதம் அருந்தி ஆனந்திக்கிறது.  
உலகிற் போந்த இறைத் தூதர்கள் அனைவரும் கால்நடை மேய்த்துள்ளனர் என்பது நபிமொழி தரும் செய்தி. எனவே, உலகின் முதல் மனிதர் ஆதம் ஓர் ஆயர். முதற்றொழில் ஆநிரை மேய்த்தல். மந்தை கலையாது காத்தலும் விட்டு விலகிச் சென்ற கால்நடைகளை மீட்டலும் மேய்ப்பரின் பணி. இறைத்த்தூதர்கள் புறத்தில் மாட்டிற்கும் ஆட்டிற்கும் ஆற்றிய பணி ஒப்பவே அகத்தில் மனிதர்க்கு ஆற்றினர்.

      மொழிகளின் எழுத்துக்கள் கொண்டு ஈண்டு உரைப்பன வெறும் மொழி விளையாட்டா? அற்றன்று. ரஸோக்திகளோ? கூறுவோர் கூறுக. அகர முதல ஆய எழுத்துக்களினுள் ஏகன் வைத்த எண்ணிறந்த ஞானங்களில் ஒரு சிட்டிகை என் சிந்தையில் சிந்திற்று. அதை இங்கே பேசினேன்.

      அகர ஆகார அட்சராதிகளைச் சற்றே ஆய்ந்தேன். ஆ என அதிசயித்து அங்காந்து சமைந்தேன். ”என்றைக்கு நிற்தேடும் ஆவென ஆவேனோ?” என்றழுதேன்.

3 comments:

  1. "ஆ"வின தொல்லையினால்
    அலறும் பொதுமக்கள்...!
    *************
    MGRTV ஹமீது
    IJS அகடாமி
    99410 86586
    ******---************
    சென்னையின் மிகப் பெரிய"" இலவச "" பொழுதுபோக்கு இடமான
    மெரீனா கடற்கரையில் சமீபநாட்களாக "ஆ"வினங் (மாடு) களின் நடமாட்டம் அதிக அளவில் காணப்படுகிறது.

    குழந்தைகள் சூழ குடும்பத்தினருடன் நிம்மதியாக பொழுதுப் போக்கும் எண்ணத்தில் தினமும் மெரீனா கடற்கரைக்கு பல்லியிர கணக்கான பொதுமக்கள் வருகைத் தருகின்றனர் !

    கடற்கரையின் மணல் பரப்பில் அமர்ந்தபடியே, சுண்டல் உள்ளிட்ட பலவித திண்பண்டங்களை சுவைத்தபடியே,
    கடல் அலைகளை ரசிப்பதும்
    ,தங்களுடன் கூட வந்தவர்களிடம் "கடலை"ப்போட்டு சிரித்து பேசி மகிழ்வதும் அலாதி ஆனந்தம் தரும்! ! இதற்காகவே தினமும் மாலை நேரங்களில் இளம் வயதினர் முதல் முதியோர் வரை பலர் குடும்பம் குடும்பமாக மெரீனா கடற்கரைக்கு வரக்காரணமாகும்!

    ஆனால் பொதுமக்களின் நிம்மதியையும்,மகிழ்ச்சியையும் கெடுத்து, இடையூறு எற்படுத்தும் வகையில் 50 க்கும் மேற்பட்ட மாடுகள் அங்கே சுற்றி திரிகின்றன.

    மிகவும் கூரிய கொம்புகளுடன் கூடிய இந்த மாடுகள் திடீர் திடிரென அங்கும் இங்குமாக ஓடுவதால் -பயத்தினால் குழந்தைகளும்-பொதுமக்களும் அலறி அடித்து ஓடும்நிலை காணப்படுகிறது.!

    இந்த மாடு களின் மூலம் "பால்" கறந்து லாபம் பார்க்கும் மாடுகளின் "உரிமையாளர்கள் ,
    மாட்டுக்கு தேவையான போதுமான உணவுகளை தங்கள் பணத்தை செலவளித்து ,வாங்கி போடாமல், எங்கேயாவது "ஓசி"யில் திங்கட்டும் என சாலைகளில் மேய விட்டு விடுகின்றனர் !

    சாலை ஓரங்களிலுள்ள
    குப்பைத் தொட்டிகளையும்,
    , சுவர்களில் கவர்ச்சியாக ஒட்டப்பட்டிருக்கும் பலவண்ண சுவரொட்டிகளையுமே தங்களின் "தீனி"க்கான தீர்வாக கொள்ள வேண்டியபரதாப நிலையில்தான் பல மாடுகள் உள்ளன.

    இப்படி சென்னை மாநகர தெருக்களிலும்..வீதிகளிலும்...
    சாலைகளிலும் அலைந்து திரிந்த மாடுகளை
    அவற்றின் உரிமையாளர்கள் இப்போது சென்னை மெரீனா கடற்கரையில் கொண்டுவந்து விட்டு செல்கின்றனர்...

    மெரீனா கடற்கரை குப்பை கூடைகளில் இருந்தும்...மணல் பரப்பெங்கும் சிதறி கிடக்கும் குப்பை கூழங்களை நாள் முழுவதும் தின்று கொழுக்கும் இந்த மாடுகளிடம் "பால் கறந்து "தங்களது வருவாயை பெருக்கி கொண்டுள்ளனர் அதன் உரிமையாளர்கள்!

    பொதுமக்களுக்கு தொல்லை தராத வகையில் மாடுகளை பராமரிக்க சென்னைபெருநகர மாநராட்சி உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கருத்தாக உள்ளது.

    "ஆ"வின் தொல்லைக்கு
    தீர்வு கிடைக்குமா...?
    ------------
    MGRTVஹமீது
    இந்தியன் ஜர்னலிஸ்டு சர்வீஸ் (IJS) அகடாமி 99410 86586

    ReplyDelete
  2. "ஆ"வின தொல்லையினால்

  3. https://m.facebook.com/story.php?story_fbid=690454691418926&id=100013632037906

    ReplyDelete