Tuesday, February 22, 2011

பூசைக்கு வரும் காதல்



உன் ஞாபகத்தில்
மூழ்கியிருந்தேன்.
என்னைக் கலைத்தது
பாங்கோசை.

மூச்சில் வெட்டியது
காலத்தின் கையில் 
கணத்தின் வாள்.

அத்தர் அனுமானம் 
எத்தனை நாள்?
உன் சொர்க்கத்தின் 
நறுமணம் தா.

ஆசைகளின்
அழுக்கு கழுவி
பூசைக்கு வருகிறது
காதல்.

இசைக்கும் பேச்சுக்கும்
நடுவில் நிகழ்கிறது
நம் சம்பாஷனை.

இருள் திரை நீக்கினேன்
ஒளி திரையானது.
ஒளித் திரை நீக்கினேன்
இருள் திரையானது.

பிண்டத்தில்
பஞ்ச பூதங்களின்
கூத்து.

பாழில் பொங்கும்
பால் வீதிகளில்
வாலைக் காதலி
வருகிறாள் வலம்.


3 comments:

  1. //ஆசைகளின் அழுக்கு கழுவி
    பூசைக்கு வருகிறது காதல்.//

    Fantastic

    ReplyDelete
  2. தாங்களுக்கு செய்கு நாயகம் ஆஷிக் ரஸூலின் ஃபைஜானே அன்றி வேறில்லை.

    ReplyDelete
  3. //உன் ஞாபகத்தில்
    மூழ்கியிருந்தேன்.
    என்னைக் கலைத்தது
    பாங்கோசை.//


    'அவனை' நினைக்க அழைக்கும் பாங்கோசையே அவன் பற்றிய நினைவைக் கலைக்குமா?
    அக விழிப்பு ஆனவர்களுக்கு எல்லா ஓசையும் இம்சைதான்.

    நல்ல கவிதை. பாராட்டுக்கள்.

    ReplyDelete