வார்த்தைகளில்
எல்லாமும்
வசியாகத்தான்
உள்ளது
சொல்லிச்
சொல்லியே
உள்ளம்
உருகலாம்
ஓராயிரம்
தடவை
மரணம்
எனக்கொரு
மலர்ப்படுக்கை
எனலாம்
காதலியின்
கடைக்கண்
பார்வையில்
கரைந்து
போய்விட்டதாய்க்
கவிதைகள்
பிதற்றலாம்
உன்மீது
வெயிலடித்தால்
எனக்கு
வியர்க்கும் என்று
கற்பனைக்
குடை விரித்து
இளைப்பாறலாம்
மிக சுகமாய்
காரியங்கள்
மெய்யாய்க்
கைக்கூடி
வருதல்
காகித
வித்தையன்று
மின்மினிகளைத்
தீயென்று
பாவித்துப்
பற்றி
எரிவதில்லை
பெருங்காடு
ஒருபோதும்.
மின்மினிகளைத்
ReplyDeleteதீயென்று பாவித்துப்
பற்றி எரிவதில்லை
பெருங்காடு ஒருபோதும்.///
அபாரம்...நிஜத்தை தரிசிக்க இயலாமல்,அல்லது அது நிகழாமல்தான் சொற்களை வாரி வாரி இறைக்கிறோம்.அவை ஒருபோதும் உண்மையாகாது.எல்லா சொற்களுமே உண்மையைப் பற்றிய அபிப்ராயங்களே!உண்மையாகாது.
மின்மினிகளைத்
ReplyDeleteதீயென்று பாவித்துப்
பற்றி எரிவதில்லை
பெருங்காடு ஒருபோதும்.//என்பது தான் அதற்கு முன் வந்த வார்த்தைகளை கவிதையாக்குகிறது.அருமை.
//எல்லா சொற்களுமே உண்மையைப் பற்றிய அபிப்ராயங்களே!உண்மையாகாது// எனும் சகோ. மாயனின் வார்த்தைகள் சிறப்பானது.