Saturday, June 30, 2012

நாப்பிழைப்பு




வார்த்தைகளில் எல்லாமும்
வசியாகத்தான் உள்ளது

சொல்லிச் சொல்லியே
உள்ளம் உருகலாம்
ஓராயிரம் தடவை

மரணம் எனக்கொரு
மலர்ப்படுக்கை எனலாம்

காதலியின்
கடைக்கண் பார்வையில்
கரைந்து போய்விட்டதாய்க்
கவிதைகள் பிதற்றலாம்

உன்மீது வெயிலடித்தால்
எனக்கு வியர்க்கும் என்று
கற்பனைக் குடை விரித்து
இளைப்பாறலாம்
மிக சுகமாய்

காரியங்கள் மெய்யாய்க்
கைக்கூடி வருதல்
காகித வித்தையன்று

மின்மினிகளைத்
தீயென்று பாவித்துப்
பற்றி எரிவதில்லை
பெருங்காடு ஒருபோதும்.

2 comments:

  1. மின்மினிகளைத்
    தீயென்று பாவித்துப்
    பற்றி எரிவதில்லை
    பெருங்காடு ஒருபோதும்.///

    அபாரம்...நிஜத்தை தரிசிக்க இயலாமல்,அல்லது அது நிகழாமல்தான் சொற்களை வாரி வாரி இறைக்கிறோம்.அவை ஒருபோதும் உண்மையாகாது.எல்லா சொற்களுமே உண்மையைப் பற்றிய அபிப்ராயங்களே!உண்மையாகாது.

    ReplyDelete
  2. மின்மினிகளைத்
    தீயென்று பாவித்துப்
    பற்றி எரிவதில்லை
    பெருங்காடு ஒருபோதும்.//என்பது தான் அதற்கு முன் வந்த வார்த்தைகளை கவிதையாக்குகிறது.அருமை.

    //எல்லா சொற்களுமே உண்மையைப் பற்றிய அபிப்ராயங்களே!உண்மையாகாது// எனும் சகோ. மாயனின் வார்த்தைகள் சிறப்பானது.

    ReplyDelete