"SWAN" by Simra, my brother's daughter.
தூய்மைக்கொரு
நிறமாகிவிட்டது
வெண்மை
மனம்
வெளுக்க வழியுண்டாய்
தொழுகின்ற
வேளையில்
வெள்ளென்று விடிகிறது வானம்
துணி
வெளுக்க வழி சொல்லும்
விளம்பரங்கள்
யாவும்
விளம்புகின்றன
“பளிச்சென்ற வெண்மைக்கு…”
பளிச்சென்பது
வெளிச்சத்தின் மறுபெயர்கூட
ஒளிக்கு
நிறமுண்டா?
என்று
யோசிக்கையில்
வெண்மையே
எண்ணமாதல் ஏன்?
சங்கு
சுட்டாலும்
வெண்மைதரும்
என்றாள் ஔவை
வெண்மை
நன்மை
என்பதும் பொருள்கோள்
சிவனில்
சுடுகாட்டுச்
சாம்பலும்
சுகந்தமாயிற்று
பால் வெண்ணீறாய்
’வள்ளல்
பெரும்பசுக்கள்’
பொழியும்
பால்
தூய்மைக் குறியீடு
நிலாப்பால்
மாந்தி
நீந்துமொரு
அன்னம்போல்
இறையொளி
பருகும் ஆன்மா
பரமஹம்சம்
வெளிரரக்குச்
சிறகுகளில்
காப்பிக்
கொட்டை நிறத்
தீற்றல்களும்
ஒளிர்
மஞ்சள் அலகும் கொண்ட
சிறு
பறவை ஒன்று
தத்தித்
தத்தி அமர்ந்து
எச்சமிட்டது
தூவெண்
துளியாய்.
No comments:
Post a Comment