’என்
கவி
தனது
அணிகலன்களைக் களைந்துவிட்டாள்.
ஆடை அலங்காரங்களின்
பெருமை
இல்லை
அவளிடம்.
அணிகலன்கள்
நம் இணைவைத் தடுக்கும்,
உனக்கும்
எனக்கும் இடையிலாகி உறுத்தும்.
உன் குரலின்
மெல்லிய ஓசையை
அவற்றின்
சலசலப்பு மறைத்துவிடும்’
என்று
ஏங்கிச் சொல்கிறது
தாகூரின் ஆன்மா
‘படிம
உருவக
குறியீட்டு
இடையீடில்லாத
நிர்வாணக்
கவித்துவம் வேண்டி
நீ
எப்போது
தியானிக்கப் போகிறாய்?’
என்கிறது
கலாப்ரியாவின் கவி-மனம்
படிம
உருவகக் குறியீட்டு அணிகலன்கள்
உருவாக்கும்
திரைகளை எல்லாம்
வெட்டி
வீழ்த்தியது
“லா இலாஹ” என்னும் வாள்
“இல்லல்லாஹ்”
என்பதில்
இதயம்
அடைந்தது
சத்தியத்தின்
தரிசனம்.
a
Super....
ReplyDelete