மீனுக்குள்
விழுந்த
யூனுஸ்
நபியைப் போல்
உன்
கண்ணுக்குள் விழுந்தேன்
கரையற்ற
கடலின்
மீனான
உன் கண்ணில்
காலத்தின்
எல்லை வரை
கரையாமல் இருப்பேன்!
*
திரும்பும்
திசையெல்லாம்
நிறைந்திருக்கும்
முகம்
தென்பட்டது
உன் முகத்தில்
உச்சி
முதல் பாதம் வரை
கண்ணாடி
ஆகிவிட்டேன்
காதலின் சுகத்தில்!
*
உன் காதலில்
புன்னகைகள்
விற்றுக்
கண்ணீர் வாங்கினேன்
ரோஜாக்கள்
மண்ணில்
உதிர்கின்றன
பனித்துளிகள்
விண்ணில் எழுகின்றன
*
என்னில்
உன்னைக்
காட்டி
உன்னில்
நீ
என்னை ஒளித்தபோது...
மறைந்த
பொக்கிஷம்
ஆகிவிட்டேன்
*
உன்னைக்
காதலிக்கும் முன்புவரை
வெறும்
கோட்டோவியமாய் இருந்தேன்
நீயே
வண்ணங்களாய்
நிரம்பிவிட்டாய்
என்னில்!
வார்த்தை ஓவியம்
ReplyDeleteநீயே வண்ணங்களாய்
ReplyDeleteநிரம்பிவிட்டாய் என்னில்!
நீயே வண்ணங்களாய்
ReplyDeleteநிரம்பிவிட்டாய் என்னில்!