Sunday, June 26, 2011

செய்தி கேளாத நாட்கள்



வானம் அளந்து 
வட்டமடித்திருந்த ராஜாளி
காணாமல் போனது
காட்டின் இருளுக்குள்.
 
வேட்டைப் புளகத்தில்
அது கத்தும் ஓசை 
கேட்கவில்லை எவரும்
சில காலமாய்.

நேரம் மறந்து 
வெட்ட வெளி துறந்து 
ஈரக் காட்டுக்குள் 
இன்னும் என்ன செய்கிறதோ?

அதன் கூரிய நகங்கள் 
பிடித்த மென்சதையின்
ஸ்பரிசச் சேதி 
எட்டியதா எவருக்கும்?

அதன் கூரிய அலகு
சுவைத்த குருதியின் 
போதை அலை 
அடித்ததா அடிமனதில்?





  

1 comment:

  1. //அதன் கூரிய நகங்கள்
    பிடித்த மென்சதையின்
    ஸ்பரிசச் சேதி
    எட்டியதா எவருக்கும்?

    அதன் கூரிய அலகு
    சுவைத்த குருதியின்
    போதை அலை
    அடித்ததா அடிமனதில்?//

    முதல் மூன்று கண்ணிகள் மேலே தூக்கிச்சென்றன.
    இந்த் இரண்டும் சரேலென பூமியை நோக்கிப் பாய்ந்துவிட்டன.

    தத்துவம் மர மண்டைக்குப் பிடிபடவில்லை.

    ReplyDelete