Friday, January 4, 2013

ஒரு பரப்பியல் நூல் மீதான பார்வைகள் - 3


ஒவ்வொரு வகுப்பிலும் இரண்டு மூன்று வருடங்கள் என்று கோட் அடித்துக் கொண்டே வந்த ஒரு ’மேதாவி’ கருணை அடிப்படையில் தூக்கி விடப்பட்டு ஆறாம் வகுப்பிற்கு வந்து சேர்ந்தானாம். மாப்பிள்ளை தோரணையில் கடைசி பெஞ்சில் உட்கார்ந்திருந்தானாம். அறிவியல் வகுப்பில் இயற்பியல் பாடத்தை ஆரம்பித்த ஆசிரியர் M for Mass என்று நடத்தவே பக்கத்தில் இருந்தவனிடம் மெல்ல சொன்னானாம், “என்னடா இந்த ஆளு இப்படிக் குழப்புறான். M for Monkey-தானே?” என்று. அத்தகைய அறிவு நிலையில் உள்ளவர்கள்தான் “இஸ்லாத்தில் வலியுறுத்தப்படும் அடிப்படைக் கொள்கைகள்” என்னும் இந்த நூலையும் எழுதியிருக்கிறார்கள் என்று காண்கிறோம்.

தர்காவிற்குச் செல்வதே ஷிர்க் என்னும் இவர்களின் மட்டையடி வாதத்திற்கு குர்ஆன் மற்றும் ஹதீஸ் ஆகியவற்றுக்கு இவர்கள் திரித்துப் பொருள் சொல்லி ஆதாரம் காட்டும் போக்கு இந்நூலிலும் இடம்பெற்றுள்ளது. நபி(ஸல்) அவர்களின் காலத்தில் இருந்த காஃபிர்கள் அல்லாஹ்வுடன் சேர்த்து வணங்குவந்தற்கென்று வேறு தெய்வங்களையும் ஏற்படுத்திக் கொன்ண்டு அவற்றிற்கு அமைத்த சிலைகளைக் குறிப்பிட ”தூனில்லாஹ்” (அல்லாஹ் அல்லாத வேறு) என்னும் வார்த்தையை அல்லாஹ் தன் திருமறையில் பயன்படுத்தியுள்ள இடங்களில் எல்லாம் இவர்கள் வலிந்து தர்காவில் அடங்கியிருக்கும் இறைநேசச் செல்வர்களையும் அது குறிப்பிடுவதாக அர்த்தம் சொல்லிப் பிரச்சாரம் செய்கிறார்கள். அப்படிப்பட்ட ஆயத்துக்களை இந்நூலிலும் எடுத்துப் போட்டு தர்காவிற்குச் செல்பவர்கள் மீது இதன் பிரச்சாரத்தைத் திருப்புகிறார்கள். தர்காவில் அடங்கியுள்ள இறைநேசரை முஸ்லிம்கள் வணங்குகிறார்கள் என்னும் நிலை இருக்குமேயானால் அவசியம் அத்தகைய பிரச்சாரத்தைச் செய்யவேண்டும். ஆனால் முஸ்லிம்களில் எவரும் தர்காவிற்குச் சென்று அங்கே அடங்கியிருக்கும் இறைநேசரை வணங்கவோ வழிபடவோ இல்லை. இந்நிலையில் சிலைவணங்கிகளிடம் செய்யப்பட வேண்டிய இப்பிரச்சாரத்தை முஸ்லிம்கள் மீது திருப்புவது வெறும் அடாவடித்தனம் மட்டுமே ஆகும்.

இவர்கள் மேற்கோள் காட்டியுள்ள ஒரு ஆயத்தையே கவனித்துப் பார்ப்போம்:
எவர்கள் அவனை விட்டுவிட்டு (அல்லாஹ்வையன்றி) வேறு பாதுகாவலர்களை ஏற்படுத்திக் கொண்டார்களோ அவர்கள் தம்முடைய இச்செயலுக்கு இவ்வாறு காரணம் கூறுகிறார்கள்; எங்களுக்கு அல்லாஹ்விடத்தில் (சிலைகள் மற்றும் தலைவர்கள்) நெருக்கத்தை ஏற்படுத்தித் தருவார்கள் என்பதற்காகத்தான் நாங்கள் அவற்றை வணங்குகிறோம் என்கிறார்கள். எவற்றில் அவர்கள் கருத்து வேறுபாடு கொள்கிறார்களோ அவை அனைத்திலும் திண்ணமாக அல்லாஹ் அவர்களிடையே தீர்ப்பளிப்பான். பொய்யைனாகவும் சத்தியத்தை நிராகரிப்பவனாகவும் இருக்கும் எவனுக்கும் அல்லாஹ் நேர்வழி காட்டுவதில்லை” (அல்-குர்ஆன்)

இத்திருவசனத்தை இவர்கள் விளங்கும் போக்கு எப்படி எனில், ”அல்லாஹ்வை அன்றி வேறு பாதுகாவலர்களை ஏற்படுத்திக் கொண்டார்களோ” என்னும் பகுதியை எடுத்துக் காட்டி தர்காவிற்குச் செல்பவர்கள் இவ்வாறுதானே அல்லாஹ் அல்லாத இறைநேசர்களைத் தங்களின் பாதுகாவலர்களாக ஏற்படுத்திக் கொள்கிறார்கள், எனவே தர்காவிற்குச் செல்வது தர்கா வழிபாடுதான், மேலும் அது சிலை வணக்கத்திற்குச் சமம்தான் என்று சொல்கிறார்கள்.

ஆனால் மேற்கோள் காட்டப்பட்ட ஆயத்தில் சுட்டப்படும் காஃபிர்கள் தங்கள் பாதுகாவலர்களாக எடுத்துக்கொண்டு வணங்கியது சிலைகளை ஆகும். அந்தச் சிலைகள் முற்காலத்தில் வாழ்ந்த அவர்களின் தலைவர்களைக் குறிக்கும் சிலைகளாகவும் இருக்கலாம். என்வேதான் மேற்படி ஆயத்தின் தமிழாக்கத்தில் இடையே அடைப்புக்குறிகளுக்குள் (சிலைகள் மற்றும் தலைவர்கள்) என்று போட்டிருக்கிறார்கள். காஃபிர்கள் செய்த இரண்டு தவறுகளை இவ்வசனம் சுட்டிக் காட்டுகிறது:
1.   அல்லாஹ் அல்லாதவற்றை (சிலைகள் மற்றும் தலைவர்கள்) தங்கள் பாதுகாவலர்களாக எடுத்துக்கொண்டது.
2.   அவ்வாறு தங்களின் பாதுகாவலர்களாக எடுத்துக்கொண்டதை வணங்கியது. (அவை வணக்கத்திற்குரியவை என்று ஒப்புக்கொண்டு செயல்பட்டது)

இதே இரண்டு தவறுகளை தர்காவிற்குச் செல்பவர்கள் இந்நாளில் செய்து வருகிறார்கள் என்று வஹ்ஹாபிகள் குற்றம் சாட்டி தர்கா ஜியாரத் என்பதை தர்கா வழிபாடு என்றும் கப்ரு வழிபாடு என்றும் சொல்கிறார்கள்.

மேற்கண்ட ஆயத்தில் சுட்டப்பட்டுள்ள ”அல்லாஹ் அல்லாதவற்றைப் பாதுகாவலர்களாக ஏற்படுத்திக் கொண்டார்கள்” (வல்லதீனத்தகதூ மின் தூனிஹி அவ்லியாஅ) என்னும் தவறு இந்நாளில் தர்காக்களில் அடங்கியிருக்கும் இறைநேசர்களுக்கு (அவ்லியாக்களுக்கு)ப் பொருந்துமா என்பதைச் சிந்திக்க வேண்டும்.

இறைநேசர்களை நாம் நம் பாதுகாவலர்களாக (அவ்லியாக்களாக) எடுத்துக் கொள்ளலாமா என்பது முதலில் நோக்கப்பட வேண்டிய விஷயம். முஸ்லிம்கள் தங்களின் பாதுகாவலர்களாக யார் யாரைத் எடுத்துக்கொள்ள வேண்டும், யார் யாரை எடுத்துக்கொள்ளக் கூடாது என்று அல்லாஹ்வே தன் திருமறையில் சுட்டிக் காட்டுகிறான்:

”நிச்சயமாக உங்களுடைய பாதுகாவலன் அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஈமான் கொண்டோரும்தான்” (இன்னமா வலிய்யுகுமுல்லாஹு வ ரஸூலுஹு வல்லதீன ஆமனூ...) (5:55)

இந்த வசனத்தில், முஸ்லிகளின் பாதுகாவலர்கள் என்று மூன்று பேரை அல்லாஹ் குறிப்பிடுகிறான்: அல்லாஹ்வும் அவனின் திருத்தூதரும் முஃமின்களும். அல்லாஹ் மட்டும்தான் பாதுகாவலன் என்று சொல்லவில்லை. அதே சமயம், வலிய்யுகும் – உங்களின் வலீ (பாதுகாவலன்) என்று ஒருமையில் குறிப்பிடப்பட்டுள்ளதே அன்றி அவ்லியா என்று இங்கே பன்மையில் குறிப்பிடப்படவில்லை. மூவரைச் சொல்லும்போது பன்மையில் குறிப்பிடாமல் ஒருமையில் சொல்லியிருப்பது ஏன்? இது தவ்ஹீதின் ஞானத்திற்கான சமிக்ஞையாக இருக்கிறது. அதாவது ”’அல்லாஹ்தான் என் பாதுகாவலன்’ என்று சொல்வதுதான் தவ்ஹீது, ’அல்லாஹ்வும் ரஸூலும் முஃமின்களும் என் பாதுகாவலர்கள்’ என்று சொன்னால் அது தவ்ஹீத் அல்ல, ஷிர்க்’ என்று கூறுவது தவ்ஹீதையே விளங்காதவர்களின் மடத்தனமான கூற்று என்பதை இந்தத் திருவசனம் காட்டுகிறது. ’அல்லாஹ்வும் ரஸூலும் முஃமின்களும் என் பாதுகாவலர்கள்’ என்று சொல்வதும் தவ்ஹீதுதான் என்பதை இந்தத் திருவசனம் நமக்கு உணர்த்துகிறது. அல்லாஹ் தன் சுயத்தால் ‘வலீ’யாக இருக்கிறான், ரஸூலுல்லாஹ் அல்லாஹ்வைக் கொண்டு நம் ’வலீ’யாக இருக்கிறார்கள், முஃமின்கள் அல்லாஹ்வையும் ரஸூலையும் கொண்டு நம் ’வலீ’யாக இருக்கிறார்கள் என்பதால் சுயத்தன்மை அல்லாஹ்வுக்கு மட்டுமே உண்டு என்னும் தவ்ஹீதின் அடிப்படையில் மூவரைச் சொன்னாலும் வலிய்யுகும் (’உங்கள் பாதுகாவலன்’ என்று ஒருமையில் சொல்லப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து அடுத்த வசனத்தில் அல்லாஹ் சொல்கின்றான்:
“அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நம்பிக்கை கொண்டோரையும் யார் பாதுகாவலர்களாக ஆக்குகின்றார்களோ, அப்பொழுது நிச்சயமாக அல்லாஹ்வின் கூட்டத்தினராகிய அவர்கள்தாம் வெற்றியாளர்கள்” (6:56)

இத்திருவசனத்திலும் அல்லாஹ், ரஸூல், முஃமின்கள் ஆகிய மூவரைப் பாதுகாவல்ர்களாக எடுத்துக்கொள்பவர்களை ‘அல்லாஹ்வின் கூட்டம்’ (ஹிஸ்புல்லாஹ்) என்று சுட்டப்பட்டுள்ளது தவ்ஹீதின் அடிப்படையில்தான். ”அல்லாஹ்வை அன்றி ரஸூலாகட்டும் அவ்லியாக்களாகட்டும் யாரையுமே பாதுகாவலராக எடுக்கக் கூடாது” என்று குருட்டுத்தனமாகப் பேசுவது தவ்ஹீத் அல்ல என்பதற்கு இவ்வசனமும் ஆதாரமாக உள்ளது.

அல்லாஹ்தான் நம் பாதுகாவலன் என்று சொல்லப்பட்டுள்ள வசனங்கள் பல உள்ளன:
”நிச்சயமாக என் பாதுகாவலன் அல்லாஹ்வே” (7:196)
”நீ மிகத் தூய்மையானவன்; நீயே எங்கள் பாதுகாவலன்” (34:41)
”இம்மையிலும் மறுமையிலும் நீயே என் பாதுகாவலன்” (12:101)
”அவர்கள் அல்லாஹ்வை அன்றி பாதுகாவலர்களை எடுத்துக் கொண்டார்களா? ஆனால், அல்லாஹ்வோ அவன் தான் பாதுகாவலனாக இருக்கிறான். அவனே இறந்தோரை உயிர்ப்பிக்கிறான்; அவனே எல்லாவற்றின் மீதும் ஆற்றல் உடையவன்” (42:9)
எனினும் அல்லாஹ்வும் ரஸூலும் முஃமின்களும் நம் பாதுகாவலர்கள் என்று சொல்வது ‘அல்லாஹ்தான் நம் பாதுகாவலன்’ என்று சொல்வதற்கு ஒருபோதும் முரணாகாது என்பதையே (5:55)-ஆம் திருவசனம் காட்டுகிறது.

”நம்பிக்கை கொண்ட ஆண்களும் நம்பிக்கை கொண்ட பெண்களும் அவர்களில் சிலர் சிலருக்குப் பாதுகாவலர்களாக இருக்கின்றனர்; அவர்கள் நன்மையை ஏவுகின்றனர், தீமையைத் தடுக்கின்றனர்” (9:71) என்னும் திருவசனக் கருத்தும் முஃமின்கள் ஒருவருக்கொருவர் பாதுகாவலர்கள் என்பதைக் காட்டுகின்றது.

முஸ்லிம்கள் யாரைத் தமது பாதுகாவலர்களாகத் தேர்ந்தெடுக்கக்கூடாது என்று கேட்டால் “அல்லாஹ்வைத் தவிர வேறு யாரையுமே பாதுகாவலர்களாக எடுத்துக்கொள்ளக் கூடாது” என்று சொல்வது திருக்குர்ஆன் போதனைக்கே மாற்றமானதாகும் என்பதையும் (5:55)-ஆம் வசனம் உணர்த்துகிறது. யாரை நம் பாதுகாவலர்களாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்று திருமறையில் அல்லாஹ் தெளிவாகச் சுட்டிக்காட்டுகிறான்:
”நம்பிக்கையாளர்களே! யூதர்களையும் கிறிஸ்தவர்களையும் உங்களின் பாதுகாவல்ரகளாக ஆக்கிக்கொள்ளாதீர்கள். அவர்கள் தம்மில் சிலர் சிலருக்குப் பாதுகாவலர்களாக இருக்கின்றனர். உங்களில் எவரேனும் அவர்களை பாதுகாவலர்களாக ஆக்கினால் நிச்சயமாக அவரும் அவர்களைச் சேர்ந்தவர்தான். அல்லாஹ் அநியாயக்கார மக்களுக்கு நேர்வழி காட்டுவதில்லை” (5:51)

இத்திருவசனத்தில் இருந்து பின்வரும் விஷயங்களும் பெறப்படுகின்றன:
1.   இறைநம்பிக்கையாளர்கள் ஒருவருக்கொருவர் பாதுகாவலர்களாக இருக்க வேண்டும்.
2.   இறைநம்பிக்கையாளர்களை நம் பாதுகாவலர்களாக எடுத்துக் கொள்ளலாம்.
3.   இறைநம்பிக்கையாளர்களை நம் பாதுகாவலர்களாக எடுத்துக் கொள்வது அநியாயம் அல்ல; எனவே அது நற்செயல் ஆகும்.

”நம்பிக்கையாளர்களே! உங்கள் தந்தைமார்களும் உங்கள் சகோதரர்களும் நம்பிக்கையைவிட நிராகரிப்பை நேசிப்பார்களானால் அவர்களை நீங்கள் பாதுகாப்பாளர்களாக எடுத்துக் கொள்ளாதீர்கள்; உங்களில் யாரேனும் அவர்களைப் பாதுகாப்பாளர்களாக எடுத்துக் கொண்டால் அவர்கள்தான் அநியாயக்காரர்கள் ஆவார்கள்” (9:23)

இத்திருவசனத்தில் இருந்து பின்வரும் விஷயங்களும் பெறப்படுகின்றன:
1.   இறைநம்பிக்கையாளர்களான தந்தைமார்களையும் சகோதரர்களையும் நம் பாதுகாவலர்களாக எடுத்துக் கொள்ளலாம்.
2.   இறைநம்பிக்கையாளர்களை நம் பாதுகாவலர்களாக எடுத்துக் கொள்வது அநியாயம் அல்ல; எனவே அது நற்செயல் ஆகும்.

”இவர்கள் நம்பிக்கையாளர்களை விடுத்து நிராகரிப்பவர்களைப் பாதுகாவலர்களாகத் தேடிக் கொள்கிறார்கள். அவர்களிடையே இவர்கள் கண்ணியத்தைத் தேடுகிறார்களா? நிச்சயமாக கண்ணியமெல்லாம் அல்லாஹ்வுக்கே உரியது” (4:139)
இத்திருவசனத்தில் இருந்து பின்வரும் விஷயங்கள் விளங்குகின்றன:
1.   இறை நம்பிக்கையாளர்களைப் நம் பாதுகாவலர்களாக ஆக்கிக்கொள்ள வேண்டும்
2.   நிராகரிப்பவர்களை நம் பாதுகாவலர்களாக ஆக்கிக்கொள்ளக் கூடாது.
இந்தத் திருவசனத்தில் ‘அல்லாஹ்வை விடுத்து நிராகரிப்பவர்களைப் பாதுகாவலர்களாகத் தேடிக் கொள்கிறார்கள்’ என்று குற்றம் சாட்டப்படாமல் ‘இவர்கள் நம்பிக்கையாளர்களை விடுத்து நிராகரிப்பவர்களைப் பாதுகாவலர்களாகத் தேடிக் கொள்கிறார்கள்’ என்று சொல்லப்பட்டிருப்பதன் மூலம் இறைநம்பிக்கையாளர்களைப் பாதுகாவலர்களாகத் தேடிக்கொள்வது என்பது எதார்த்தத்தில் அல்லாஹ்வைப் பாதுகாவலனாகத் தேடிக்கொள்வதற்கு முரணானதல்ல என்பதை வலியுறுத்துகிறது.

”நம்பிக்கையாளர்களே! நீங்கள் நம்பிக்கையாளர்களை விடுத்து நிராகரிப்பவர்களைப் பாதுகாவலர்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள்; உங்களுக்கே எதிராக நீங்கள் ஒரு தெளிவான ஆதாரத்தை அல்லாஹ்வுக்கு ஆக்கித்தர விரும்புகிறீர்களா?” (4:144)
என்னும் திருவசனக் கருத்தும் முற்கூறப்பட்ட திருவசனக் கருத்தை வலியுறுத்துகின்றது.

”எவன் அல்லாஹ்வை விட்டு ஷைத்தானைப் பாதுகாவலனாக ஆக்கிக்கொள்கின்றானோ அவன் நிச்சயமாக பகிரங்கமான பெரும் நஷ்டத்தை அடைந்தவன் ஆவான்” (4:119)

மேலே நாம் கண்ட திருவசனங்கள் நாம் யார் யாரைப் பாதுகாவலர்களாக எடுத்துக் கொள்ளலாம் யார் யாரைப் பாதுகாவல்ர்களாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்பதை மிகத் தெளிவாகக் காட்டுகின்றன.

அல்லாஹ், ரஸூல் மற்றும் இறைநம்பிக்கையாளர்களை நாம் நமது பாதுகாவலர்களாக எடுத்துக் கொள்ளலாம்.
நிராகரிப்பாளர்களை (யூதர்கள், கிறிஸ்தவர்கள், ஷைத்தான் ஆகியவர்கள் பெயர் சுட்டப்பட்டுள்ளன) நாம் நமது பாதுகாவலர்களாக எடுத்துக் கொள்ளக் கூடாது.

மேலே காட்டப்பட்டுள்ள திருவசனங்களில் ”தூனில்லாஹ்” (அல்லாஹ் அல்லாத வேறானவை) என்று ‘கண்டிக்கும்’ தொனியில் அல்லாஹ் எவற்றையெல்லாம் சுட்டிக்காட்டுகிறான் என்று பார்க்கும் போது சிலைகளையும் நிராகரிப்பாளர்களையுமே அன்றி இறைநம்பிக்கையாளர்களையோ ஈமானின் மேலான நிலைகளுக்குச் சென்று அல்லாஹ்வின் நேசத்தை (விலாயத்) அடைந்த அவ்லியாக்களான இறைநேசர்களையோ அல்ல.

அல்லாஹ் + ரஸூல் + முஃமின்கள் என்னும் பார்வை திருக்குர்ஆனில் பல இடங்களில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

”நிச்சயமாக கண்ணியமெல்லாம் அல்லாஹ்வுக்கே உரியது” (4:139; 10:65)
என்று கூறும் அல்லாஹ் தன்னுடைய திருமறையிலேயே இன்னொரு இடத்தில்,
”ஆனால், கண்ணியம் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் நம்பிக்கையாளர்களுக்குமே உரியது; எனினும் நயவஞ்சகர்கள் இதனை அறிய மாட்டார்கள்” (63:8) என்று தெளிவுபடுத்துகிறான்.

கண்ணியம் என்பது அல்லாஹ்வுக்கு மட்டும்தான் என்பதும் கண்ணியம் என்பது அல்லாஹ்வுக்கும் தூதருக்கும் நம்பிக்கையாளர்களுக்கும் என்பதும் முரணானவை அல்ல. இதை விளங்குவதுதான் தவ்ஹீத் அறிவு. மாறாக, ‘அல்லாஹ்வுக்கு மட்டும்தான் கண்ணியம்; அதில் ரஸூலாக இருந்தாலும் அவ்லியாவாக இருந்தாலும் யாருக்கும் இடம் கிடையாது’ என்று சொல்வது தவ்ஹீத் அல்ல. இதனை விளங்காதவர்கள் யார் என்பதை அல்லாஹ்வே சொல்லிவிட்டான் “முனாஃபிக்கீன்” (நயவஞ்சகர்கள்) என்று.

அதே போல், “நிச்சயமாக வலிமை அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியது” (2:165) என்றும் அல்லாஹ் அறிவிக்கின்றான். இதன் பொருள் என்ன? எனவே அல்லாஹ் அல்லாதவை எதற்காவது வலிமை இருப்பதாகக் கருதுவது ஷிர்க் என்பதா? அப்படியெனில் மலக்குகள் நபிமார்கள் முஃமின்கள் யாருக்குமே வலிமை இல்லையா? என்றெல்லாம் சிந்தித்தால் நபி(ஸல்) அவர்கள் நமக்குக் கற்றுத் தருகிறார்கள்: “லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்” (அல்லாஹ்வைக் கொண்டே அன்றி எந்த ஆற்றலும் இல்லை வலிமையும் இல்லை) (சுனன் அபூதாவூத்). அதாவது, அல்லாஹ்வைக் கொண்டு நமக்கு ஆற்றலும் வலிமையும் உண்டு!

கண்ணியம், வலிமை, பாதுகாக்கும் ஆற்றல் ஆகியவை எல்லாம் அல்லாஹ்வுக்கு சுயமாக இருக்கின்றன. அல்லாஹ் அல்லாத வேறு எதற்கும் எவருக்கும் இவை சுயமாகக் கிடையாது.

அதேபோல், கண்ணியம் வலிமை பாதுகாக்கும் ஆற்றல் ஆகியவை அல்லாஹ்வைக் கொண்டு ரஸூலுக்கும் இறைநம்பிக்கையாளர்களுக்கும் உண்டு. இதை மறுப்பது குஃப்ர் என்னும் நிராகரிப்பாகும்.

ஆனால் அல்லாஹ்வை அன்றி வேறு எவராக இருப்பினும் – ரஸூலாக இருப்பினும் வலியுல்லாஹ்வாக இருப்பினும் – அவர் வணக்கத்திற்கு உரியவர் என்று கருதுவது ஷிர்க் ஆகும்; வணங்குவது ஷிர்க் ஆகும்.

மேலும் ”எங்களுக்கு அல்லாஹ்விடத்தில் (சிலைகள் மற்றும் தலைவர்கள்) நெருக்கத்தை ஏற்படுத்தித் தருவார்கள் என்பதற்காகத்தான் நாங்கள் அவற்றை வணங்குகிறோம் என்கிறார்கள்” என்பதாக அந்தக் காஃபிர்கள் சொல்லும் காரணத்தை தர்கா ஜியாரத்துடன் ஒப்பிட்டு, அல்லாஹ்வின் நெருக்கத்தை அடையத்தானே இவர்களும் தர்காவிற்குப் போகிறார்கள், எனவே இதுவும் மேற்படி ஆயத்தில் வரும் சிலைவணக்கம் போன்றுதான்; எனவே தர்கா ஜியாரத் என்பது தர்கா வழிபாடுதான் என்று சொல்கிறார்கள். இந்த அடாவடியான பேச்சை நான் பலபேரிடம் சந்தித்திருக்கிறேன். இவர்கள் முடிவு செய்துவிட்ட காரணத்தினால், தர்கா ஜியாரத் என்னும் சொல்லையே பயன்படுத்த மாட்டார்கள் அதற்குப் பதிலாக தர்கா வழிபாடு என்னும் சொல்லைத்தான் பயன்படுத்துவார்கள். “அம்பா நாயகம் தர்காவுக்குப் போக வேண்டும்” என்று ஒருமுறை நான் சொன்னபோது வஹ்ஹாபிசக் குட்டையில் ஊறிய ஒரு மட்டை உடனே “தர்கா வழிபாடு கூடும் என்கிறீர்களா?” என்று அடாவடித் தனமாகக் கேட்டது. தர்கா ஜியாரத்தை வழிபாடு என்று நீ விளங்கி வைத்திருந்தால் உன் எய்ட்ஸ் வந்த மூளைக்கு வேண்டிய வைத்தியத்தைப் பார் சகோதரா!

ஆய்த்தின் பகுதியை மீண்டும் ஒருமுறை கவனியுங்கள்: “எங்களுக்கு அல்லாஹ்விடத்தில் (சிலைகள் மற்றும் தலைவர்கள்) நெருக்கத்தை ஏற்படுத்தித் தருவார்கள் என்பதற்காகத்தான் நாங்கள் அவற்றை வணங்குகிறோம் என்கிறார்கள்

அவர்களே சொல்கிறார்கள், “அவற்றை வணங்குகிறோம்” என்று. ஆக, சிலைகளை அவர்கள் வணங்கினார்கள். அவை வணக்கத்திற்கு உரியவை என்னும் கொள்கை அவர்களிடம் இருந்தது.

தர்காவிற்குப் போகும் எவரும் அங்கே அடங்கி இருப்பவரை வணங்குவதில்லை. என்னுடைய தனிப்பட்ட ஸ்டேட்மெண்ட்டாகவே தருகிறேன்: “நான் தர்காவிற்குச் செல்வேன். தர்காவில் அடங்கியிருப்பவரை வணங்க மாட்டேன். அங்கே அடங்கியிருப்பவர் வணக்கத்திற்கு உரியவர் அல்ல.” இதன் பிறகும், ’இல்லை நீங்கள் இறைநேசரை வணங்கத்தான் செய்கிறீர்கள். நீங்கள் செய்வது தர்கா வழிபாடுதான் என்று எவனாவது சொல்வான் எனில் எந்தக் கொள்கையில் தான் இருப்பதகாகக் கற்பனை செய்துகொண்டாலும் உண்மையில் அவனிருக்கும் கொள்கை ரவுடியிஸம் என்றுதான் சொல்ல வேண்டும்.

“நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்கவில்லை” என்று நபி(சல்) அவர்கள் காஃபிர்களைப் பார்த்துச் சொல்வதற்கான முகாந்திரம் எதுவாக இருந்தது? மேற்படி ஆயத்தில் கண்டோமே, “நாங்கள் அவற்றை வணங்குகிறோம்” என்று அந்தக் காஃபிர்கள் கொடுக்கிறார்களே அந்த வாக்குமூலம்.

ஆனால் வஹ்ஹாபிகளின் அடாவடித்தனம் எப்படி இருக்கிறது? கிப்லாவை முன்னோக்கித் தொழுகிறார்கள் என்பதற்காக திக்கைத் தொழும் துருக்கர் என்று பாரதி சொன்னான் அல்லவா? அந்த மாதிரி இருக்கிறது. இத்தனைக்கும் பாரதி சொன்னதாவது தொழுகையைப் பார்த்தே சொல்லப்பட்டது. தொழுகையின் கோலத்தை – முன்னோக்கும் முறையைப் பார்த்து அவனுக்கு வந்த சந்தேகம் அது. சந்தேகம் வருவது பிழையில்லை. “எல்லா முஸ்லிம்களும் எல்லாத் தொழுகைகளிலும் ஒரே திசையை நோக்குகிறீர்கள். (அதாவது அவன் ஊரில் வைத்துப் பார்த்த அளவில் சொல்கிறான்) அதே திசையைப் பார்த்துதான் ருகூ சஜ்தா எல்லாம் செய்கிறீர்கள். எனவே திக்கைத்தானே வணங்குகிறீர்கள்” என்று அவன் கேட்டால் விளக்கம் சொல்லலாம். “சீ மிஸ்டர் பாரதி, our cute little funny poet, நீங்கள் நினைப்பது தவறு. நாங்கள் எல்லாத் தொழுகையிலும் கிப்லா என்னும் திசையை முன்னோக்கித்தான் தொழுகிறோம் என்ற போதும் நாங்கள் அந்தத் திசையைத் தொழவில்லை, நாங்கள் அல்லாஹ்வைத்தான் தொழுகிறோம்”. இந்த விளக்கத்தை பாரதி ஏற்றுக் கொள்வதுதானே நியாயம்? ஆனால் அதற்குப் பிறகும் அந்த முண்டாசுக் கவிஞன் தன் மீசையை முறுக்கிவிட்டுக்கொண்டு “’நாங்கள் அந்தத் திசையைத் தொழவில்லை’ என்று நீங்கள் சொல்வதை நான் ஏற்கமாட்டேன், நிராகரிக்கிறேன். நீங்கள் திக்கைத் தொழுபவர்கள் என்று மீண்டும் மீண்டும் நான் சொல்லிக் கொண்டுதான் இருப்பேன்” என்று சொன்னால் அதை அராஜகம் என்றும் அடாவடி என்றும் சொல்வதில் தவறு என்ன? அப்படிச் சொன்னால் பாரதியின் கொள்கைக்கும் அதே பேர்தான் கிடைக்கும், ’ரவுடியிஸம்’ என்று.

பள்ளிவாசலில் தொழுகை நடப்பதை ஒருவர் ஒரு வருட காலம் கவனித்த பிறகு ”முஸ்லிம்கள் பள்ளிவாசலின் சுவற்றை வணங்குகிறார்கள்” என்று ஒரு ஸ்டேட்மெண்ட் விட்டால் அதைச் சரி என்பீர்களா? “முஸ்லிம்கள் கஃபாவை வணங்கவில்லை” என்று மாற்று மதச் சகோதரர்களுக்கு எத்தனை நூல்களில் மேடைகளில் ’விளக்கம்’ கொடுக்கிறீர்கள். “உங்கள் விளக்கத்தை ஏற்க முடியாது, பிறகு ஏன் கஃபாவிற்குச் சென்று சுற்றி வருகிறாய்? நீ சொல்வது உண்மையாக இருந்தால் கஃபாவை முன்னோக்கித் தொழாதே. அதை முன்னோக்குவது நீடிக்கும் வரை நீ அதைத்தான் தொழுகிறாய் என்று நான் சொல்லிக்கொண்டுதான் இருப்பேன். அதை நீ தொழவில்லை என்று நீ சொல்வதை ஏற்றுக்கொள்ள மாட்டேன்” என்று ஒருவன் சொன்னால் அந்த வாதத்தை என்னவென்பீர்கள்? நியாயமே இல்லாத அடாவடித்தனமான வாதம் என்றுதானே சொல்வோம்?

தர்காவில் அடக்கத்தலத்தை நோக்கித் தொழுகையா நடக்கிறது? எங்காவது அப்படி உண்டா? அப்படி இல்லாத நிலையிலும்கூட, அங்கே அடங்கியிருப்பவரை நாங்கள் வணங்கவில்லை என்பது தெளிவுபடுத்தப்பட்ட பின்பும்கூட அங்கே நடைபெறுவது வணக்கம்தான் என்று வஹ்ஹபிசக் காரர்கள் சொன்னால் அது பச்சை அடாவடித்தனமான பேச்சே அன்றி வேறில்லை.

இந்நூலின் 44-வது பக்கத்தில் இதே அடாவடித்தனமான பிரச்சாரத்தைப் பார்க்கிறோம்: “அரேபிய தீபகற்பத்திலும் உலகின் மற்ற பாகங்களிலும் இஸ்லாம் செழித்தோங்கியது. பிந்தைய கால கட்டத்தில் இந்த நிலையில் சில மாற்றங்கள் ஏற்படத் தொடங்கியது. ஒரே இறைவனை வணங்கிவந்த மக்கள் அவனுக்கு இணைவைக்கக் கூடிய மாபாதகச் செயல்களை செய்ய முற்பட்டனர். இந்த வழக்கம் தற்போதுவரை பரந்து விரிந்து கிடக்கிறது. இறைவன்பால் தங்களை நெருக்கமாக கொண்டு செல்லும் நல்லடியார்கள் மீது உதவி கோருவதும், பிரார்த்திப்பதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட செயல் என்பதாக இத்தகையவர்கள் வாதிடுகின்றனர். இது குறித்து அல்லாஹ் திருமறையில் கூறுகிறான்:-
தங்களுக்கு யாதொரு நன்மையோ தீமையோ செய்ய இயலாத அல்லாஹ் அல்லாதவற்றை வணங்குகின்றார்கள். இன்னும் இவை எங்களுக்கு அல்லாஹ்விடம் பரிந்துரை செய்பவை என்றும் கூறுகிறார்கள். வானங்களிலோ, பூமியிலோ அல்லாஹ் அறியாதவை இருக்கின்றன என (எண்ணிக்கொண்டு) நீங்கள் அவனுக்கு அறிவிக்கின்றீர்களா? அவன் மிகவும் பரிசுத்தமானவன். அவர்கள் இணைவைப்பதை விட்டும் உயர்ந்தவன் (அல்குர்ஆன் 10:18).
மேற்கண்ட திருமறை வசனத்தின் மூலம் அறியவருவது என்னவென்றால், அல்லாஹ்வை விடுத்து அவ்லியாக்கள், நல்லடியார்கள் மற்றும் இதர பொருட்களை வணங்குவது மாபெரும் குற்றமாகும். ஷிர்க் என்னும் இத்தகைய கொடிய செயலை அல்லாஹ் மன்னிக்க மாட்டான்.” (பக்கம்: 44,45)
இவர்கள் இப்படி எழுதுவதெல்லாம் எப்படி இருக்கிறது என்றால் ‘டாக்டருக்கு வைத்தியம் பார்க்கப் போகிறேன்’ என்று நோயாளி ஒருவன் நாளெல்லாம் புலம்பிக் கொண்டிருப்பதைப் போல் இருக்கிறது. பாவம், அவனுக்குத்தான் வைத்தியம் தேவை என்பது அவனுக்குத் தெரியவில்லை.

”அல்லாஹ்வை விடுத்து அவ்லியாக்கள், நல்லடியார்கள் மற்றும் இதர பொருட்களை வணங்குவது மாபெரும் குற்றமாகும். ஷிர்க் என்னும் இத்தகைய கொடிய செயலை அல்லாஹ் மன்னிக்க மாட்டான்” – இது எங்களுக்கு நன்றாகத் தெரியும் ஐயா. உங்களுக்குத் தெரிய வேண்டியது என்னவெனில் தர்காவில் ஷிர்க்கான காரியங்கள் நடைபெறவில்லை, அங்கிருக்கும் அவ்லியாவை யாரும் வணங்குவதில்லை என்பதும் உங்கள் புத்தியில் பிசகு இருக்கிறது என்பதும் அதைச் சரி செய்ய வேண்டும் என்பதும்தான்.”

புதிதாக ஒரு ஊருக்கு வந்த ஒருவன் ”இந்த ஊரிலும் ஏன் எல்லாக் கட்டடங்களும் கோணல் கோணலாக இருக்கின்றன” என்றானாம். அவனுடைய கண்தான் கோணலாக இருக்கிறது என்று காட்ட நினைத்த ஒருவன் முகம் பார்க்கும் கண்ணாடியை அவனுக்கு முன் நீட்டி “உன் கண்தான் கோணலாக இருக்கிறது பார்” என்று சொன்னானாம். கண்ணாடியில் பார்த்துவிட்டு அந்த க்ரிட்டிக் சொன்னானாம், “போடா கிறுக்குப் பயலே, என் கண் நேராத்தானே இருக்கு” என்று. அவனுக்குப் பார்க்க அவன் கண் நேராகத்தான் தெரிந்ததாம். வஹ்ஹாபிகளும் அந்த கண்ணழகனைப் போல் இருக்கும் போது நாம் என்ன சொல்லி அவர்களுக்கு விளங்கப் போகிறது? அவர்களே கண்ணாடியைக் கையில் வைத்துக்கொண்டுதான் பேசுகிறார்கள்: குர்ஆன் மற்றும் ஹதீஸ். ஆனால் அவர்களின் பார்வை கோணலாக இருக்கின்றதே என்ன செய்ய?

இந்தக் கதையில் வருபவன் சொன்னதைப் போன்றே ஒரு பிலாக்கணம் காணீர்:
”முந்தைய காலங்களில் இணைவைத்த சமூகத்தினரைவிட தற்காலத்தில் இணை வைப்பவர்கள் மிக மோசமாக நடந்து கொள்கிறார்கள். தற்போது தர்காக்களில் நடைபெற்றுவரும் மோசமான செயல்கள் இவற்றை உணர்த்துவதாய் உள்ளது. அல்ஹுசைன் தர்கா, எகிப்திலுள்ள தர்காக்கள், எமனிலுள்ள அல்ஹாதி தர்கா, சிரியாவிலுள்ள இப்னு அரபியின் தர்கா, பாக்தாதிலுள்ள முஹைத்தீன் அப்துல் காதிர் ஜீலானி அவர்களின் தர்கா, மற்றும் முஸ்லிம் உலகிலுள்ள அறியப்பட்ட மற்றும் அறியப்படாத பல தர்காக்களிலும் அரங்கேறும் மார்க்கத்திற்குப் புறம்பான பல செயல்கள், அல்லாஹ்விற்கு இணை வைப்பதாக உள்ளன. இதில் வருத்தத்திற்குரிய விசயம் என்னவென்றால் தவ்ஹீதைப்பற்றியும் ஷிர்க்கைப் பற்றியும் மக்களிடையே ஒரு சில நல்லடியார்கள்தான் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள். நாமும் இறைவனிடம் அல்லாஹ்வை விடுத்து மற்றவர்களிடம் பிரார்த்திக்கும் மக்களுக்காக நேர்வழி கிடைக்க அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம். மேலும் இத்தகைய பாவமான காரியங்களை விட்டு விலகுமாறு மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த பாடுபடுவோம்.” (பக்கம்:45,46)

உங்கள் உணர்வு எனக்குப் புரிகிறது பிம்பாஸ். “டாக்டருக்கு வைத்தியம் பார்க்கப் போகிறேன்” என்று புலம்பும் ஒருவனின் அக உணர்வுகள் எனக்குப் புரியாதா என்ன? நீங்கள் மேற்கோள் காட்டியிருக்கிறீர்களே, அந்த தர்காக்களில் அடங்கியுள்ள வலிமார்கள் அவர்கள்தான் டாக்டர்கள். என்ன நினைப்பில் பேசுகிறீர்கள் பிம்பாஸ்? உலகில் இறைநேசர்கள் அனைவரும் one fine morning ஒட்டுமொத்தமாக இல்லாமல் போய்விட்ட பின் மடச்சாம்பிராணிகள் ஒன்று கூடி கட்டியவைதான் தர்காக்கள் என்றா? இமாம் அபூஹனீஃபா (ரஹ்) அவர்களின் தர்கா இருப்பதை அப்துல் காதர் ஜீலானி அறிந்திருந்தார்களா இல்லையா? எதிர்த்தார்களா? அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்களின் தர்கா இருந்ததை இப்னுல் அரபி (ரஹ்) அறிந்தார்களா இல்லையா? எதிர்த்தார்களா? இறைநேசச் செல்வர்களின் முயற்சியாலும் முனைப்பாலும் கட்டப்பட்டவை தர்காக்கள். அல்லாஹ்வின் அருள் இறைங்கும் இடங்கள் அவை என்பது இறைநேசச் செல்வர்களின் ஏகோபித்த முடிவு. ஹதீஸ் கல்வி, தஃப்ஸீருல் குர்ஆன், ஃபிக்ஹு என்று தொடங்கி இஸ்லாமியக் கல்விகள் என்று எத்தனைத் துறைகள் இருக்கின்றனவோ அத்தனைத் துறைகளிலும் தலைமுறை தலைமுறையாக பெரும்பாகப் பங்களிப்புச் செய்தவர்கள் சுன்னத் வல் ஜமாஅத்தைச் சேர்ந்த சூஃபிகள், ஆலிம்கள். அவர்கள் அனைவரும் ஏற்றுக் கொண்டது தர்கா ஜியாரத்தும் உரூஸ் கொண்டாட்டமும். என்ன நினைப்பில் பேசுகிறீர்கள்? உலகெங்கும் இஸ்லாத்தைப் பரப்பிய இறைநேசர்கள் எல்லாம் வழிகேடர்கள் என்றும் தவ்ஹீதை உணராத மடையர்கள் என்றும் நினைப்பா? நபி (ஸல்) அவர்கள் சொன்னார்களே, “ஷைத்தானின் கொம்பு நஜ்தில் உதயமாகும்” என்று, அந்த வழிகேடனான இப்னு அப்துல் வஹ்ஹாப் நஜ்தியும் அவனின் கொள்கையை ஏற்றுக்கொண்ட ஒரு டஜன் கயவர்களும்தான் உண்மையான தவ்ஹீதை அறிந்தவர்களா? (”இஸ்லாமிக் மோனோதீசம்” என்னும் நூலில் ஒரு வஹ்ஹாபிசப் பிரச்சாரகர் சொல்லியிருந்தார் ஃகலீஃபாக்களின் காலகட்டத்திற்குப் பின் கடந்த பதின்மூன்று நூற்றாண்டுகளில் தவ்ஹீதின் தீப்பந்தம் (torch) அணைந்துவிடாமல் பாதுகாத்து அதன் ஒளியைப் பரப்பியவர்கள் இரண்டே பேர்தானாம்: இப்னு அப்துல் வஹ்ஹாப் நஜ்தி மற்றும் இப்னு தைமிய்யா. உண்மை என்னவெனில் கடந்த பதின்மூன்று நூற்றாண்டுகளில் ஒரு முஸ்லிம் எழுத்தாளர் சொல்லிய மிகச்சிறந்த ஜோக் இதுதான்!)

இதில் வருத்தத்திற்குரிய விசயம் என்னவென்றால் தவ்ஹீதைப்பற்றியும் ஷிர்க்கைப் பற்றியும் மக்களிடையே ஒரு சில நல்லடியார்கள்தான் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள்.” என்கிறார் பிம்பாஸ். சுயகழிவிரக்கம் என்று கேள்விப் பட்டிருக்கிறீர்களா? அது ஒரு மனநோயாக மாறக்கூடும் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். அதற்கான ஆதாரமாக இந்த வரியைச் சொல்லலாம். உண்மையான நிலையில் தன் நிலையை எண்ணிக் கண்ணீர் வடிப்பது ஆரோக்யமானது. ஆனால் கற்பனையின் அடிப்படையில் எழும் சுயகழிவிரக்கம் என்பது சைக்கோக்களுக்குத்தான் வரும். பிம்பாஸின் மேற்படி வாசகத்தில் அந்தத் தன்மை இருக்கிறது.

ஊருக்கு வெளியே நாலு கபோதிகள் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்களாம், “ம்.. இந்த ஊர்ல யாருக்குமே கண் பார்வை சரியில்ல. நாளுக்கு பத்து ஆக்சிடெண்ட் நடக்குது, ரெண்டு மூனு பேர் அதுல மவுத்தாகுறானுங்க. நாம நாலு பேராவது நல்ல பார்வையோட சுதாரிப்பா நடந்து போய் வந்துக்கிட்டிருக்கோம்” என்று. பிம்பாஸ் அண்ட் கோவின் மேற்படி வாசகம் இதை ஒத்திருக்கிறது.

”நாமும் இறைவனிடம் அல்லாஹ்வை விடுத்து மற்றவர்களிடம் பிரார்த்திக்கும் மக்களுக்காக நேர்வழி கிடைக்க அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம். மேலும் இத்தகைய பாவமான காரியங்களை விட்டு விலகுமாறு மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த பாடுபடுவோம்” என்கிறார் பிம்பாஸ். இது தர்கா செல்லும் எம்மனோரை குறித்த வாசகமாக நூலில் இடம்பெற்றுள்ளதால் இது பற்றி நானும் சொல்லவேண்டியிருக்கிறது. பிம்பாஸ் சொல்லும் சூழல் இருக்குமெனில் அவர் சொல்லியிருக்கும் பணியை நானும் செய்வேன். அது என் மீது கடமை. அத்துடன், தர்கா ஜியாரத் என்பது பலன் நல்கும் நபிவழி (சுன்னத்) என்பதை பிம்பாஸின் சீடர்கள் (பிம்பாஸ் இப்போது இம்மண்ணில் இல்லை ஆதலால்) உணரவேண்டும் என்று நானும் நாளும் அல்லாஹ்விடம் பிரார்த்திக்கிறேன், குறிப்பாக இந்த நூலை மொழிபெயர்த்தவர்களும் அணிந்துரை வழங்கியிருக்கும் சகோதரர்களும். மேலும் பொய்ப் பிரச்சாரம் என்னும் பாவமான காரியத்தை விட்டு விலகி அவர்கள் இறைநேசர்களின் தர்காக்களுக்கு ஜியாரத் செய்வதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த பாடுபடுவோம்.

(தொடரும்...) 

6 comments:

  1. தம்பி அ.தௌபீக் ரமீஸ் பிலாலி அவர்களே..........ஒரு பரப்பியல் நூல் மீதான உங்கள் பார்வையிலும், உணர்விலும், சிந்தனைகளிலும், விளக்கங்களிலும் தெறித்திருக்கும் கோபக்கனல் என்னை ஆச்சர்யப்பட வைத்துவிட்டது .....ஒரு கோணத்தில் மட்டுமே யோசித்திருக்கிறாரோ? நடுநிலையில் இருந்து யோசித்திருக்கலாமோ? என்பது போன்ற கேள்விகளுடன் ஆறு பதிவுகளுக்கும் அதே அளவிலோ அல்லது அதற்க்கு மேலுமோ பின்னூட்டமும், மறுதலிப்பும், மாற்றுக்கருத்துக்களும் எழுத தோன்றிய எண்ணத்தையும் தவிர்த்துவிட்டு (நான் ஒரு வஹாபி அல்ல என்பதால் மட்டும் அல்ல...வேறு காரணங்களுக்காகவும்) ஒரு சில கேள்விகளை மட்டும் கேட்டு முடித்துக்கொள்கிறேன்.

    வலியுக்கும் என்பதற்கு தமிழிலில் "பாதுகாவலன்" என்றா பொருள்கொள்ளவேண்டும்? பெரும்பாலான (முக்கியமாக அப்துல்லாஹ் யூசூப் அலி) ஆங்கில மொழிபெயர்ப்பாளர்கள் வலியுக்கும் என்பதை "ally / friend" எனவும், ஔலியா என்பதற்கு "allies / friends" எனவும் மொழிபெயர்த்திருக்கும் போது "பாதுகாவலன்" என்ற முற்றிலும் வேறான மொழிபெயர்ப்பு தமிழில் ஏன்?

    5:55 Your (real) friends are (no less than) Allah, His Messenger, and the (fellowship of) believers,- those who establish regular prayers and regular charity, and they bow down humbly (in worship) -- Abdullah Yousf Ali

    அதைப்போலவே 5:56 யிலும் தமிழ் மொழிபெயர்ப்புக்கும், ஆங்கில மொழிபெயர்ப்புக்கும் இத்தனை பெரிய வேறுபாடு ஏனோ?
    5:56 “அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நம்பிக்கை கொண்டோரையும் யார் பாதுகாவலர்களாக ஆக்குகின்றார்களோ, அப்பொழுது நிச்சயமாக அல்லாஹ்வின் கூட்டத்தினராகிய அவர்கள்தாம் வெற்றியாளர்கள்” (6:56) --- (By the way, இந்த வசனம் 6:56 அல்ல ....5:56....தவறாக type செய்துவிட்டீர்கள் என்று நினைக்கிறேன்)

    5:56 As to those who turn (for friendship) to Allah, His Messenger, and the (fellowship of) believers,- it is the fellowship of Allah
    that must certainly triumph - Abdullah Yousf Ali

    "அப்பொழுது நிச்சயமாக அல்லாஹ்வின் கூட்டத்தினராகிய அவர்கள்தாம் வெற்றியாளர்கள்” என்பதற்க்கும், ".......it is the fellowship of Allah that must certainly triumph" என்பதற்கும் கருத்தில் மிகபெரிய வேறுபாடு உள்ளதை மறுக்கமாட்டீர்கள் என்று நம்புகிறேன். அப்பொழுது என்கிற வார்த்தை எங்கிருந்து வந்தது?

    என்னுடைய அறிவிற்க்கு எட்டியவரை 5:56 க்கு "அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நம்பிக்கை கொண்டோரையும் யார் பாதுகாவலர்களாக ஆக்க நாடுகின்றார்களோ அவர்களிடம் அல்லாஹ் சொல்வதுபோலவே (since the verse starts with "As to those") அடுத்த பகுதி இருக்கிறது "it is the fellowship of Allah that must certainly triumph"

    It is like .....after having said 5:55, Allah turns towards those who have formed a friendly association with Allah, His Messenger(PBUH) and fellow believers and says" Oh...you believers who have formed a friendly association with I, My Messenger and believers, it is this association that must certainly triumph"

    நண்பன் என்பதற்கு பதிலாக பாதுகாவலன் என்கிற பொருள்கொள்கிற போதுதான் இத்தனை குழப்பம் நேர்வதாக நான் கருதுகிறேன் .....I think we need to decide on whether to use ally or protector .....மேற்க்கொண்டு பிரயாணத்தின் போது பேசலாம் (இறைவன் நாடி இருந்தால்)

    ReplyDelete
  2. http://en.wikipedia.org/wiki/Wali

    வலி என்ற அரபி பதத்துக்கு விக்கியின் விளக்கம் மேலே உள்ள லிங்கில் உள்ளது.

    இதில் custodian, protector, helper என்று மூன்று ஆங்கில சொற்களை இணையாக எழுதியுள்ளார்கள்.

    இந்த இன்னும் சிலவற்றை சேர்க்கலாம், aid, support இப்படியாக...

    அல்லாஹ் உங்களுடைய friend, அவனுடைய தூதர் - (ஸல்)- அவர்கள் உங்களுடைய friend இன்னும் நம்பிக்கையாளர்கள் உங்களுடைய friend என்று அர்த்தப் படுமானால், “அப்படியா friendஆ.. அடுத்த வாரம் அப்டியே டீ சாப்டுட்டு சினிமாக்கு செகண்ட் ஷோ வருவாங்களா” என்று போயிட்டு வரும் friend அல்ல.. என்பதை விளங்கிக் கொள்வது நல்லது என்றே அறிகிறேன்.

    மேலே உள்ள லிங்கில் வலி என்ற வார்த்தைக்கு ஓர் உதாரணம் சொல்லப்பட்டிருக்கிறது, அது என் அறிவிற்கு அருமையான உதாரணமாய் உள்ளது...

    a father is WALI of his children

    அதாகப்பட்டது, தந்தையானவர் தமது மகன்களின் வலி அதாவது பாதுகாவலர், guardian..

    அப்படி பார்த்தால் அல்லாஹ்வும், அவனது தூதரும் - (ஸல்) - நம்பிக்கையாளர்களும் நமது பாதுகாவலர்கள், Guardians..

    அதுவும் தவிர, ஒரு வார்த்தை மொழி பெயர்க்கப்படும் போது குறிப்பாக broad spectrum உள்ள வார்த்தைகள் உதாரணமாக தமிழில் ‘அறம்’ என்ற வார்த்தையை எந்த ஆங்கில சொல் வைத்து மொழிபெயர்ப்பீர்கள்... எந்த வார்த்தையை கொண்டும் சரியாக மொழிபெயர்க்க முடியாது, ஏனெனில் நல்லவையனைத்தும் அறம் என்ற சொல்லில் அடங்கும்.

    ’பண்பு’ என்ற வார்த்தையை எந்த சொல்லோடு ஒப்பிட முடியும், ஒருவரை ‘பண்புள்ளவர்’ என்று நாம் குறிக்கிறோம்... என்றால் அது குறித்து ஒரு பட்டியலே போட்டு விடலாம்.. இவையெல்லாம் மொழிபெயர்க்கப்படும் போது ஏற்படும் குறைபாடுகள்.

    அது போல் ஆங்கிலத்தில் 'culture' என்ற வார்த்தை...

    (நன்றி: அல்லாஹ்வின் அழகிய திருநாமங்கள், நூலாசிரியர்: ஜஸ்டிஸ் மு.மு.இஸ்மாயில்)

    ReplyDelete
    Replies
    1. நாகூர் இஸ்மாயில் அவர்களே........அதே விக்கிபீடியாவில் சற்றே கீழிறங்கி படித்தீர்களானால் இவ்வாறு போட்டிருக்கிறதே:
      In Sunni Islam, in religious uses, it is (wali is) generally short for Waliullah (Arabic ولي الله) or friend of God.

      அடியேனும் "friend" என்பதை டீ சாப்பிட்டுவிட்டு இரண்டாம் ஆட்டம் சினிமா பார்த்துவிட்டு வரலாம் என்பதான "friend" ஆக குறிப்பிடவில்லை ......I was only referring to Abdullah Yousuf Ali's translation

      ஒரு மொழியில் எழுதப்பட்டிருக்கும் ஒரு நூலை வேறு ஒரு மொழியில் மொழிபெயர்க்கும் போது குறைபாடுகள் இருந்துவிட்டு போகட்டும் ....அதில் குற்றமேதுமில்லை ....ஆனால் திருக்குர்ரானை மொழிபெயர்க்கும் போது அதில் அதிக கவனம் தேவை.....அங்கே மொழியின் குறைபாடுகளுக்கு இடம் கொடுப்பது சரி அல்ல அன்றே நான் கருதுகிறேன்......

      அதே திருக்குர்ரான் வசனம் 5:55 க்கு நீங்கள் குறிப்பிட்டுள்ள wikipedia author தந்திருக்கும் மொழிபெயர்ப்பினை படித்தீர்களா?
      وَلِيُّكُمُ اللّهُ وَرَسُولُهُ وَالَّذِينَ آمَنُواْ الَّذِينَ يُقِيمُونَ الصَّلاَةَ وَيُؤْتُونَ الزَّكَاةَ وَهُمْ رَاكِعُونَ
      Only Allah is your Vali and His Messenger and those who believe, those who keep up prayers and pay the poor-rate while they bow.
      —Quran, sura 5 (Al-Ma'ida), ayah 55[3]


      என்ன மாதிரியான மொழிபெயர்ப்பு இது? இது மாதிரியான தப்பும் தவறுமான, அரைகுறை மொழிபெயர்ப்பினை தந்திருக்கும் ஒருவரின் விளக்கத்தின் அடிப்படையிலா நம்முடைய விவாதத்தை வைப்பது? இந்த மனிதர் தொடர்ந்து எழுதியிருக்கும் கூத்தினை பாருங்களேன் .....அவர் எழுதியிருக்கிறார்:


      "In English, wali most often means a Muslim saint or holy person". ஓஹோ .....அப்படியா சங்கதி? அப்படி என்றால் இந்த வசனத்திற்க்கு அவர் தந்திருக்கும் ஆங்கில மொழிபெயர்ப்பிற்கு என்ன மாதிரியான அர்த்தம் வருகிறது பாருங்கள்:

      Only Allah is your Vali ....meaning....Only Allah is your saint or holy person.....அட இது என்ன கூத்து?

      Delete
    2. ஒரு தந்தை அவனது பிள்ளைகளுக்கு பாதுகாவலனாக இருக்கலாம் .....ஆனால் அவன் தரும் பாதுகாப்பு என்பது வழி கெடுவதிலிருந்தும் அல்லாஹ் நமக்கு தரும் பாதுகாப்போடு ஒப்பிட இயலாதது...மேலும் அவன் தரும் பாதுகாப்பும் அல்லாஹ்விடம் இருந்து வருவதுதான் ....ஆக, இறைவன் ஒருவனே உண்மையான பாதுகாவலன்......பாதுகாப்பை இறைவனிடம் கேட்க்க வேண்டும்....நாம் தேடும் பாதுகாப்பை எவர் மூலம் இறைவன் நமக்கு தருகிறானோ அவர்களிடம் நன்றி பாராட்டலாம், அவர்களுக்காக துவா செய்யலாம், அவர்களுக்கு மரியாதை செய்யலாம், அவர்களுக்கு பாதுகாப்போ, உதவியோ தேவைப்படும் போது இறைவன் நாடியிருந்தால் ஓடோடிச்சென்று பாதுகாப்பு தரலாம் அல்லது உதவி செய்யலாம் ....அதை விடுத்தும் அடுத்த முறை நமக்கு பாதுகாப்பு தேவைப்படும்போதோ அல்லது உதவி தேவைப்படும் போதோ அதே நபரிடம் பாதுகாப்பு தேடுவதோ அல்லது உதவி வேண்டுவதோ தவறல்லவா? இம்முறையும் நாம் பாதுகாப்பு தேடவேண்டியது இறைவனிடம் மட்டுமே ...இறைவன் நாடியிருந்தால் அதே நபர்கள் இம்முறையும் நமக்கு பாதுகாப்பு தரலாம் அல்லது உதவி செய்யலாம் ....ஆனால், நாம் பாதுகாப்பு தேடவேண்டியதும், உதவி கோர வேண்டியதும் இறைவனிடம் மட்டுமே என்பதைத்தான் வஹாபிகள் வலியுறுத்த நினைப்பதாகவே நான் கருதுகிறேன்.....அதில் தவறேதும் இருப்பதாகவும் எனக்கு தெரியவில்லை ......

      ஒரு சூழ்நிலை ஒன்றை கற்பனை செய்துகொள்வோம்:
      நீந்த தெரியாத நான் தண்ணீரில் வீழ்ந்து தத்தளித்துக்கொண்டிருக்கும் வேளையிலே முன்பு இதே போலவே என்னை காப்பாற்றிய தம்பி ரமீஸ் பிலாலியை நினைத்துக்கொண்டு, தம்பி ரமீஸ் பிலாலி அவர்களே இம்முறையும் என்னை காப்பாற்றுங்கள் என்று நான் வேண்டுவது சரியா இல்லையெனின் இறைவா கடந்தமுறை போன்றே இந்த முறையும் என்னை காப்பாற்றுவாயாக என்று வேண்டுவது சரியா? யா அல்லாஹ் என்னை காப்பாற்றுவாயாக என முறையிடுவது சரியா இல்லையெனின் யா முகைய்யுதீன் அப்துல்காதர் ஜிலானி அவர்களே என்னை காப்பாற்றுவீர்களாக என முறையிடுவது சரியா? இறைநேசர்களின் அடக்கஸ்தலங்களுக்கு செல்வது அது அவர்களுக்கு நாம் செய்யும் மரியாதை....அவர்கள் இறைநேசர்கள் என்பதை நாம் அறிந்தும், புரிந்தும், உணர்ந்தும் கொண்டிருப்பதற்க்கான அடையாளம்....இறைவனின் நேசம் பொங்கி வழியும் அவ்விடத்திலே நாமும் சிறிது நேரம் இருந்துவரலாமே
      என்பதான ஒரு முயற்சியாக மட்டுமே இருக்கும்வரை அதில் தவிறில்லை. ஆனால் அவரின் கபுருக்கு பூ சாத்துவதும், சந்தானம் தெளிப்பதும், அங்கே அமர்ந்து நாட்டுச்சர்க்கரை வாங்கி பாத்திஹா ஒதுவதுமான செயல்கள் தேவை இல்லை என்றே நானும் கருதுகிறேன். செல்வதில் தவறில்லை, அவர்களுக்காக நாம் துவா செய்வதும், நமக்காக அவர்களை அல்லாஹ்விடம் (கவனிக்கவும்: நமக்காக அவர்களை அல்லாஹ்விடம்) துவா செய்ய வேண்டுவதிலும் தவறில்லை ...அனால் பிந்தைய காரியங்களில் ஈடுபடுவதை தவிர்த்துக்கொள்ளுங்கள் என்று சொன்னால் நம்ம மக்கள் கேட்க்கவா போகிறார்கள்? ஆகவே, சில நல்ல காரணங்களுக்காக தர்கா visits தவிர்க்கப்படவேண்டும் என்று மார்க்க அறிஞர்கள் ஒன்று கூடி அறிவித்தால் அதில் என்ன தவறு இருக்க முடியும்? இறைநேசர்களுக்கு எல்லாம் தலைவரான எம்பெருமான் முஹம்மது (ஸல்) அவர்களின் மீது அல்லாஹ் கொண்டிருக்கும் நேசத்தையும், அவர்களுடைய உம்மத்தான நம்மீது அவர்கள் கொண்டிருக்கும் நேசத்தையும் நாம் உணர மதீனாவிற்க்குதான் போகவேண்டுமா என்ன? மதீனாவிற்கு போய்த்தான் ஆகவேண்டுமா என்ன?

      இந்த அவுலியா பல கிராமதுக்கள் செய்திருப்பவர்...மிகவும் சக்தி வாய்ந்தவர்....அவருட தர்காவிற்க்கு போய் பாத்திகா ஓதி வந்தால் உங்கள் கஷ்டம் எல்லாம் சரிஆகிடும் என்று ஒருவர் சொல்வதும் அதை கஷ்ட்டப்படுபவர் வேத வாக்காக எடுத்துக்கொண்டு அவர் சொன்னதை செய்து வருவதும் நடை முறையில் இல்லாமலா இருக்கிறது? நாளையே தம்பி ரமீஸ் பிலாலி வாருங்கள் இந்த தர்காவிற்க்கு சென்று வருவோம் என்று அழைத்தால் மறுக்காமல் நானும் சென்று வருவேன் .....அதில் தவறில்லை. காரணம் அவுலியாக்கள் பற்றி என்னை அழைப்பவருக்கும், எனக்கும் இருக்கும் தெளிவு. ஆனால் அப்படி தெளிவோடு தான் தர்காக்களுக்கு எல்லோரும் செல்வதாக நினைப்பதும், வாதிடுவதும் தவறு. இதை போலவே கப்ரு ஜியாரத்தும் என்று நான் நினைக்கிறேன். எதனால் கப்ரு ஜியாரத் செய்யவேண்டும் என்ற தெளிவோடு சென்று எதை செய்ய வேண்டுமோ அதை மட்டும் செய்து விட்டு வரும் நல்லடியார்களோடு நம்மையும் எல்லாம் வல்ல இறைவன் சேர்த்து வைக்கட்டும் .....அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

      Delete
    3. ஒரு தந்தை அவனது பிள்ளைகளுக்கு பாதுகாவலனாக இருக்கலாம் .....

      - சரி,

      ஆனால் அவன் தரும் பாதுகாப்பு என்பது வழி கெடுவதிலிருந்தும் அல்லாஹ் நமக்கு தரும் பாதுகாப்போடு ஒப்பிட இயலாதது...

      - எனக்கு புரியவில்லை, அது என்னா ”..வழிகெடுவதிலிருந்தும்...” வார்த்தை முழுமை பெறவில்லையா...?

      அதாவது தந்தை பாதுகாப்பு தருவது என்பது சரி தான், அந்த பாதுகாப்பு அல்லாஹ் தரும் பாதுகாப்புக்கு ஈக்வலாக முடியாது என்று கூற வருகிறீர்களா?

      அதாவது நீங்கள் சொல்ல வருவது தந்தை மகனுக்கு வலியாக இருக்கிறார்..

      அல்லாஹ் ஒருவருக்கு (உதாரணமாக அதே மகனுக்கு என்று வைத்துக் கொள்வோம்) வலியாக இருக்கின்றான்...

      இரண்டுக்கும் ஒரே ‘வலி’ என்ற வார்த்தையை பயன்படுத்தலாம்... ஆனால் இரண்டுமே வேறு வேறு...

      இப்படி நீங்கள் சொல்வீர்கள் என்றால், இதற்கான பதில் சகோதரரின் கட்டுரையிலேயே பதிலும் இருக்கிறது..

      மேலும் அவன் தரும் பாதுகாப்பும் அல்லாஹ்விடம் இருந்து வருவதுதான் ....

      - எவன் தரும் பாதுகாப்பும்? புரியவில்லை.. அவன் என்று தந்தையையா சொல்கிறீர்கள்..? இல்லை... தெரியாம தான் கேக்கிறேன்...

      “...அவர்கள் கொண்டிருக்கும் நேசத்தையும் நாம் உணர மதீனாவிற்க்குதான் போகவேண்டுமா என்ன? மதீனாவிற்கு போய்த்தான் ஆகவேண்டுமா என்ன?...”

      - உவைஸ் கர்னீ (றஹ்) என்று ஒரு இறைநேசர், பெருமானார் (ஸல்) அவர்கள் மீது அளவிட முடியாத நேசத்தையும் வைத்திருந்தார்கள், அவர்கள் பெருமானார் (ஸல்) அவர்களை நேரில் கண்டதில்லை... ஆனால் அவர்கள் நேரில் பார்க்காமல் இருந்ததற்கு காரணம் இருந்தது... ஆனால் நீங்கள் இப்படி கேட்பதிலிருந்து எனக்கு உங்களின் பிரியம் எந்த அளவிற்கு உள்ளது அல்லது வஹ்ஹாபியிசத்தில் எந்த அளவிற்கு நீங்கள் இருக்கிறீர்கள் என்று என்னால் கணிக்க முடிகிறது - ஆதத்தின் மகன்கள் இருவருமே இறைவனுக்கு காணிக்கை செலுத்தினாலும் ஒன்று மட்டுமே அங்கீகரிக்கப்பட்டது போல் அங்கீகரிக்கப்பட்ட நேசமாக உவைஸ் கர்னீ (றஹ்) அவர்கள் பார்க்காமல் இருந்ததையும் அங்கீகரிக்கப்படாத நேசமாக நீங்கள் பார்க்காமல் இருக்க சொல்லும் லேம் எக்ஸ்கியூஸையும் என்னால் பார்க்க முடிகிறது - இது என் தவறாக கூட இருக்கலாம் -

      ”...என்னை காப்பாற்றிய தம்பி ரமீஸ் பிலாலியை நினைத்துக்கொண்டு, தம்பி ரமீஸ் பிலாலி அவர்களே இம்முறையும் என்னை காப்பாற்றுங்கள் என்று நான் வேண்டுவது சரியா இல்லையெனின் இறைவா கடந்தமுறை போன்றே இந்த முறையும் என்னை காப்பாற்றுவாயாக என்று வேண்டுவது சரியா?..”

      - என்னை கேட்டால் இரண்டுமே சரியென்பேன், ஏனெனில் முன்னர் தான் ரமீஸ் அவர்கள் உங்களை காப்பாற்றி யிருக்கிறார்களே... அதே போல் ‘யா முஹ்யித்தீன்...” என்று அழைத்து முன்னர் காப்பற்றப்பட்டிருந்தால் மறுபடியும் அவர்களை அழைப்பதில் என்ன தவறு..?

      நாளையே தம்பி ரமீஸ் பிலாலி வாருங்கள் இந்த தர்காவிற்க்கு சென்று வருவோம் என்று அழைத்தால் மறுக்காமல் நானும் சென்று வருவேன் ....

      - அவர்கள் அப்படி உங்களை அழைக்காமல் இருக்க நான் துவா செய்கிறேன்

      Delete
  3. நாகூர் இஸ்மாயில் அவர்களே........அதே விக்கிபீடியாவில் சற்றே கீழிறங்கி படித்தீர்களானால் இவ்வாறு போட்டிருக்கிறதே:
    In Sunni Islam, in religious uses, it is (wali is) generally short for Waliullah (Arabic ولي الله) or friend of God.

    - அதான் நான் சொன்னேனே, நான் friend என்று சொல்வதை மறுக்கவில்லை, ஆனால் இந்த இடத்தில் அந்த சொல் பொருந்தாது என்றே கருதுகிறேன்...

    அடியேனும் "friend" என்பதை டீ சாப்பிட்டுவிட்டு இரண்டாம் ஆட்டம் சினிமா பார்த்துவிட்டு வரலாம் என்பதான "friend" ஆக குறிப்பிடவில்லை ......I was only referring to Abdullah Yousuf Ali's translation

    - நல்ல வேளை, நீங்க அப்படி நினைக்கவில்லை, நான் நீங்க அல்லது யாரேனும் அப்படி நினைத்து விடுவார்களோ என்று அநாவசியமாக பயந்து இருந்திருக்கிறேன்...

    ஒரு மொழியில் எழுதப்பட்டிருக்கும் ஒரு நூலை வேறு ஒரு மொழியில் மொழிபெயர்க்கும் போது குறைபாடுகள் இருந்துவிட்டு போகட்டும் ....அதில் குற்றமேதுமில்லை ....ஆனால் திருக்குர்ரானை மொழிபெயர்க்கும் போது அதில் அதிக கவனம் தேவை.....அங்கே மொழியின் குறைபாடுகளுக்கு இடம் கொடுப்பது சரி அல்ல அன்றே நான் கருதுகிறேன்......

    - கவனம் தேவை என்பதில் மாற்றுக் கருத்து இல்லை, ஆனால் மொழிபெயர்ப்பில் குறைபாடு வருவது என்பது குரான் ஷரீஃபை மொழி பெயர்க்கும் போதும் வரும் என்பதை நான் எனதளவில் மறுப்பதற்கில்லை...

    அதே திருக்குர்ரான் வசனம் 5:55 க்கு நீங்கள் குறிப்பிட்டுள்ள wikipedia author தந்திருக்கும் மொழிபெயர்ப்பினை படித்தீர்களா?
    وَلِيُّكُمُ اللّهُ وَرَسُولُهُ وَالَّذِينَ آمَنُواْ الَّذِينَ يُقِيمُونَ الصَّلاَةَ وَيُؤْتُونَ الزَّكَاةَ وَهُمْ رَاكِعُونَ
    Only Allah is your Vali and His Messenger and those who believe, those who keep up prayers and pay the poor-rate while they bow.
    —Quran, sura 5 (Al-Ma'ida), ayah 55[3]


    என்ன மாதிரியான மொழிபெயர்ப்பு இது? இது மாதிரியான தப்பும் தவறுமான, அரைகுறை மொழிபெயர்ப்பினை தந்திருக்கும் ஒருவரின் விளக்கத்தின் அடிப்படையிலா நம்முடைய விவாதத்தை வைப்பது? இந்த மனிதர் தொடர்ந்து எழுதியிருக்கும் கூத்தினை பாருங்களேன் .....அவர் எழுதியிருக்கிறார்:


    "In English, wali most often means a Muslim saint or holy person". ஓஹோ .....அப்படியா சங்கதி? அப்படி என்றால் இந்த வசனத்திற்க்கு அவர் தந்திருக்கும் ஆங்கில மொழிபெயர்ப்பிற்கு என்ன மாதிரியான அர்த்தம் வருகிறது பாருங்கள்:

    Only Allah is your Vali ....meaning....Only Allah is your saint or holy person.....அட இது என்ன கூத்து?

    - இதை தொடர்ந்து நீங்கள் எழுதியிருப்பது மொட்டை தலைக்கும் முன்னங்காலுக்கும் முடிச்சு போடுவது போல் எனக்கு தோன்றுகிறது

    அல்லாஹ், தூதர், நம்பிக்கையாளர்கள் யாவரும் வலி என்று முன்னதாக மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

    பின்னர் குறிப்பிடும் போது in general, in practice, wali என்பவர்களை இறைநேசர்களை குறிக்க பயன்படுத்தப் படுகிறது.. இப்படி தான் நான் புரிந்து கொள்கிறேன்.. அதற்காக அல்லாஹ் தான் saint, holy person என்பதாக நீங்கள் புரிந்து கொண்டால் புரிந்து கொள்வதில் கூட தவறு நேர்ந்திருக்கலாம் என்றே கருத தோன்றுகிறது.

    நன்றிகள்

    ReplyDelete