Friday, July 8, 2011

குறையொன்றுமில்லை




வானமே
என் சட்டையாகியிருக்கிறது

கீழாடையாகவும்கூட.

உள்ளாடைகளும்
வேறொன்றல்ல.

மண்
வானத்தை உடுத்திக்கொள்ளும்
இந்தக் கருணையை
வாழ்வதில்
என்னதான் குறை?

1 comment: