Sunday, July 24, 2011

X-இரவு


சூரியனோடு
பெயர்களும்
மறைந்தன

உறுத்தாமல்
கொஞ்சம்
உருகித் தோன்றின
உருவங்கள்

மனிதர்கள் என்பதை மறந்து
மனிதர்களைப் பார்ப்பது
நன்றாக இருந்தது

அலைந்து கொண்டிருந்தது
காற்று
குழந்தையைப் போல்

நிலாவும் இருந்தது
நிஜமாய்

முழுமையாய்த்
திறந்திருந்தது
விண்

விண்ணிலே
மிதந்திருந்தது
மண்

வைகறை வரை
தழுவிக் கிடந்தன
தூக்கமும் விழிப்பும்
அறிவிப்பின்றி
யாருக்கும் சொல்லாமல்
வந்திருந்தது

புனித இரவென்று
சொல்லப்படாத
அந்தச்
சாதாரண இரவு


2 comments:

  1. ///மனிதர்கள் என்பதை மறந்து
    மனிதர்களைப் பார்ப்பது
    நன்றாக இருந்தது///

    அந்தக் கணத்தில் அவர்கள் எப்படித் தோன்றினார்கள்?

    நன்றி நல்ல கவிதை!

    ReplyDelete