Tuesday, November 9, 2010

பேரழகு



படைப்புத் தூரிகையின்
பச்சைத் தீற்றல்கள்
புல்லின் இதழ்கள்.

பேரழகின் எளிமை
எளிமையின் பேரழகு.

புல்லின் இதழ்மேல்
பனித்துளி

பேரழகின் எளிமை
எளிமையின் பேரழகு.


பனித்துளியில்
ஒளிர்கிறது
சூரியன்.


பேரழகின் எளிமை 
எளிமையின் பேரழகு.


பனித்துளி எடுத்து
இதயத்திற்குள் வைத்தேன்
சூரியன்
இரவை ரசித்திருக்க.

5 comments:

  1. உங்களுடைய எழுத்துக்களும் //பேரழகின் எளிமை
    எளிமையின் பேரழகு//

    ReplyDelete
  2. அன்பு ரமீஸ், படம் உண்மையில் பேரழகுதான். எங்கே கிடைத்தது? கவிதை வரிகளும் பிரம்மாதம். யாருடையவை?
    அன்புடன்
    ரூமி

    ReplyDelete
  3. கவிதை வரிகளும் படமும் அருமை

    ReplyDelete
  4. //புல்லின் இதழ்மேல்
    பனித்துளி

    பேரழகின் எளிமை
    எளிமையின் பேரழகு.//

    நல்ல கவிதை. பாராட்டுக்கள்.

    ReplyDelete