”உயிருள்ள
ஒவ்வொன்றையும்
நாம்
நீரிலிருந்து வெளியாக்கினோம்”
(21:30)
இத்திருவசனத்தின்
சிந்தனையில்தான் ‘பிரபஞ்சம் நீரால் ஆனது’ என்று நான் சொல்லிக் கொண்டேன். அந்த சிந்தனையின்
நீட்சி ஒரு கேள்வியை எழுப்பியது.
‘உயிருள்ள
ஒவ்வொன்றும் நீரில் இருந்து வெளியாக்கப்பட்டது என்றுதான் இவ்வசனம் சொல்கிறது. பிரபஞ்சமோ
உயிரற்ற பொருள்களும் கொண்டது. அப்படியிருக்கும் போது பிரபஞ்சம் நீரால் ஆனது என்று,
அதாவது இவ்வசனம் ஒட்டுமொத்தப் படைப்பையும் குறிப்பதாக எவ்வாறு கூற முடியும்?’
இந்தக்
கேள்வி முதலில் ஏன் எழுகிறது என்பதை ஆராய வேண்டும். அறிவியல் பொருட்களை உயிருள்ளவை
உயிரற்றவை என்று கூறிட்டுக் கற்பிக்கிறது. அந்த அடிப்படையில்தான் இந்தக் கேள்வி எழ
முடியும். இந்தப் பாகுபாடு உண்மைதான் என்று ஏற்றுக் கொண்டால் பிரபஞ்சத்தை ஒரு பிணம்
என்று சொல்ல வேண்டியதுதான்! ஏனெனில் மனிதன் துழாவிய கோடானு கோடி பிரபஞ்ச உறுப்புக்களில்
பூமியில் மட்டுமே ‘உயிருள்ளவை’ – ஜீவராசிகள் காணப்படுகின்றன. அதாவது, பூமிக்கும் உயிர்
இல்லை! பூமியில் உயிருள்ளவை காணப்படுகின்றன.
பூமி
என்பது மொத்தப் பிரபஞ்சத்தில் ஒன்றுமே இல்லை என்று சொல்லிவிடலாம். ஒரு மனித உடலில்
முன்கை முடியின் நுனியில் மட்டும் உயிரின் லேசான துடிப்பு இருக்கிறது என்று சொன்னால்
அந்த மனிதன் உயிருடன் இருக்கிறான் என்று சொல்ல முடியுமா? அப்படித்தான், பூமியில் மட்டும்
கொஞ்சம் உயிர் இருக்கிறது என்று சொல்வது பிரபஞ்சம் ஒரு பிணம் என்று சொல்வதைத் தடுக்கப்
போதாது.
இந்தப்
பார்வையை ஆன்மிகத்தால் சகித்துக் கொள்ளவே முடியாது. ஏனெனில், பொருட்களில் உயிருடையவை
உயிரற்றவை என்னும் பாகுபாடு உண்மை என்று ஏற்றால் இறைவன் பிரபஞ்சத்தை உயிரற்ற பிணமாக
வைத்திருக்கிறான் என்று சொல்ல வேண்டி வரும். ஆன்மிகமோ பிரபஞ்சம் முழுவதும் உயிருள்ளது
என்றே காண்கிறது. உயிரற்றவை என்று எதுவுமே இல்லை.
சூஃபிகளின்
பார்வை என்ன?
“அல்லாஹு
அவனை
அன்றிப் பரம்பொருள் வேறில்லை
அவனே
உயிருள்ளவன்
அவனே
நிலைத்தவன்”
(2:255)
என்கிறது
திருக்குர்ஆன்.
இவ்வசனத்தின்
வாக்கிய அமைப்பின் இலக்கணப்படி, “ஹுவல் ஹய்யுல் கய்யூம்” என்பதின்படி, அவனே உயிருள்ளவன்
– அதாவது, அவனை அன்றி உயிருள்ளது வேறு எதுவும் இல்லை என்றும், அவனே நிலைத்தவன் – அதாவது,
அவனை அன்றி நிலைத்தது வேறு எதுவும் இல்லை என்றும் அர்த்தமாகும். இதன்படி, ‘இறைவன் உயிருள்ளவன்;
பிரபஞ்சம் உயிரற்றது’ என்று ஆகும்.
”நீங்கள்
பிணமாக இருந்தீர்கள்;
அவன்
உங்களுக்கு உயிரளித்தான்”
(2:28)
என்பதின்படி,
பிரபஞ்சத்தை உயிருள்ளதாக இறைவன் ஆக்கினான்.
இறைவன்
சுயமாக உயிருள்ளவன்; பிரபஞ்சம் அவனைக் கொண்டு உயிருள்ளதாக இருக்கிறது. அதாவது பிரபஞ்சத்தில்
இறைவனது ஜீவனின் பிரதிபலிப்பு இல்லாத எப்பொருளும் இல்லை.
”வானங்களிலும்
பூமியிலும்
உள்ளவை
அனைத்தும்
அவனைத்
துதிக்கின்றன”
(59:24)
என்கிறது
திருக்குர்ஆன். இக்கருத்து மீண்டும் மீண்டும் திருமறையில் சொல்லப்படும் ஒன்று. இதனை
வைத்து இப்னுல் அரபி (ரஹ்) கூறுகிறார்கள், “எனவே பிரபஞ்சத்தில் உயிரற்ற பொருள் எதுவும்
இல்லை. அனைத்து வஸ்துக்களிலும் அவனுடைய உயிரின் பிரதிபலிப்பு உள்ளது. உயிர் இல்லையேல்
அவை அவனை எப்படித் துதிக்கும்? அனைத்து வஸ்துக்களிலும் அவனது அறிவின் (இல்மு) பிரதிபலிப்பு
இருக்கிறது. அறிவு இல்லையேல் அவை அவனை எப்படித் துதிக்கும்?”
’பிரபஞ்சம்
அதன் சுயத்தன்மையில் உயிரற்றதுதான், மனிதனையும் சேர்த்து. சுயத்தன்மையில் உயிருள்ளவன்
இறைவன் மட்டுமே. ஆனால், அவனுடைய கருணைக் கொடையாக அவனது உயிரின் பிரதிபலிப்பு (தஜல்லி-
ஒளிச்சுடர்- theophany) பிரபஞ்சம் முழுவதும் உள்ளது. அவனின் ஜீவனின் பிரதிபலிப்பு இல்லாப்
பொருளே இல்லை.” சூஃபிகளின் பார்வை இதுதான்.
ஆரம்பத்தில்
காட்டப்பட்ட திருவசனம் இக்கருத்தையும் தருகிறது. அதாவது, அந்தத் திருவசனத்தில் இப்படி
விளங்கவும் இடம் இருக்கிறது:
“நாம் வெளியாக்கினோம் (வ ஜஅல்னா)
நீரில் இருந்து (மினல் மாஇ)
அனைத்துப் பொருட்களையும் (குல்ல ஷைஇன்)
உயிருள்ளதாக (ஹய்ய்)”
(21:30)
இங்கேதான்
’நீர்’ என்பது ஒரு குறியீடாகி உட்பொருளை வேண்டி நிற்கிறது. வானங்களும் பூமியும் சூரியனும்
சந்திரனும் நட்சத்திரங்களும் சொர்க்கமும் நரகமும் சகல வஸ்துக்களும் எந்த நீரில் இருந்து
வெளிப்படுத்தப் பட்டன?
அர்ஷ்
எந்த நீரின் மீது இருந்தது?
அந்த
நீர் எந்த நீர்?
குரான் ஷரீபின் 8 வது அத்தியாயம் 11 வது வாக்கியத்தில் “உங்கள் இருதயங்களைப் பலப்படுத்தி, உங்கள் பாதங்களை உறுதிப்படுத்துவதற்காகவும், அவன் உங்கள் மீது வானிலிருந்து மழை பொழியச் செய்தான்” - இப்படி வருகிறதே - மழை நீர் எப்படி இருதயங்களை பலப்படுத்தும் பாதங்களை உறுதிப்படுத்தும் - இதை உங்கள் சிந்தனையின் வெளிப்பாட்டில் விளக்க முடியுமா? - இது பத்ரு யுத்தம் நடந்ததை பற்றிய வாக்கியம் என்று அறிகிறேன். இதை ஏன் கேட்கிறேன் என்றால் நீங்கள் எழுதியிருப்பதும் நீரை பற்றி தான் - ஒரு வேலை இந்த வசனத்திற்கும் உங்களின் கடைசி இரண்டு பதிவுகளுக்கும் தொடர்பு கூட இருக்கலாம்.
ReplyDeleteநாகூர் இஸ்மாயில் அவர்களே,
Deleteஅஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)....
Chapter 8 Verse 11 meaning is:
"When He caused calm to fall on you as a security from Him and sent down upon you water from the cloud that He might thereby purify you, and take away from you the uncleanness of the Shaitan, and that He might fortify your hearts and steady (your) footsteps thereby.
மழை நீரால் indirect effect ஆக அவர்களது இதயங்கள் தூய்மைப்பட்டு பலபட்டதையும், அப்படி தூய்மைப்பட்டு பலபட்ட இதயங்களின் மூலமாக அவர்களது ஒவ்வொரு அடியும் (அணுகுமுறையும் என்றும் பொருள் கொள்ளலாம்) நிதானபட்டதையும் இறைவன் இங்கே சுட்டிக்காட்டுகிறான் என்று நான் கருதுகிறேன்.....மாறாக இதற்கும் ரமீஸ் பிலாலி அவர்களின் சமீபத்திய இரண்டு பதிவுகளுக்கும் நேரடி தொடர்பு இருப்பதாக நான் கருதவில்லை ...இந்த இடத்தில் இறைவன் மழை நீரை கறைபட்டு இருந்த அவர்களது இதயங்களை தூய்மைப்படுத்திய ஒரு விசயமாகவே குறிப்பிடுகிறானே அன்றி உயிரையும், நீரையும் நேரடி தொடர்பு படுத்தி ஏதும் சொல்வதாக நான் கருதவில்லை.....என்னுடய புரிதலிலும், என் புரிதலின் பகிர்தலிலும் பிழை இருப்பின் நீங்களும், கருணையாளன் இறைவனும் என்னை மன்னிக்க வேண்டுகிறேன்
Chapter 2 Verse 255 அவனே உயிருள்ளவன் என்று சொல்வதாக நான் கருதவில்லை....It does not say Allah is the only one who has life as you have mentioned....it actually says " Allah - there is no deity except Him (அவனன்றி பரம்பொருள் வேறில்லை ), the Ever-Living (அவன் எப்போதும் மரணிக்காதவன் .....அல்லது....அவன் எப்போதும் வாழ்பவன் ), the Sustainer of [all] existence (அவனது அனைத்து படைப்புகளையும் வாழ வைப்பவன்)........". Here "the Ever-Living" means everything that has life dies at some point but not Him...He never dies. அவனே உயிருள்ளவன் என்று கூறும்போது மற்றவை எல்லாம் (அதாவது அவனது படைப்புகள் எல்லாம்) உயிரற்றவை என்று அர்த்தம் ஏற்படுகிறது. ஆகவே, அவனே உயிருள்ளவன் என்று அர்த்தம் கொள்வது சரியல்ல என்று நான் கருதுகிறேன்...மாறாக, அவன் உயிருள்ளவன் என்கிறபோது (யூசுப் அலி சொல்வது போல) அவனது படைப்புகள் உயிரற்றவை என்று அர்த்தம் ஏற்படுவதில்லை
ReplyDeleteThe notorious Yousuf Ali translation says " Allah! There is no god but He,-the Living, the Self-subsisting, Eternal.....". Even here "He-the Living" does not mean that only he is living and everything else is dead. It only means that Allah is Living ....Allah is Living so as His Creations (as long as He Wishes).
”நீங்கள் பிணமாக இருந்தீர்கள்;
அவன் உங்களுக்கு உயிரளித்தான்”
(2:28)
-- இந்த வசனமும் இந்த இடத்தில் வெகு பொருத்தமாக அமைவதை நீங்கள் கவனித்திருக்கலாம் ....He is Living...everything else was dead until He Gave them life (including the human)
சில நாட்களுக்கு முன்பு நீங்கள் உலகில் உள்ள அனைத்து பொருட்களிலும் உயிர் இருக்கிறது என்று எழுதி இருந்ததை இங்கே நான் நினைவு கூற விரும்புகிறேன்
For Chapter 21 Verse 30, Yousuf Ali says" ......We made from water every living thing...." it only means that Allah made every LIVING thing from water ...the non-living things are merely the sub products of all the living things ....or....the products made by the living things such as human
When Allah says He Made all living things from water it does not necessarily mean that He made all living things ONLY from water ...water is one of the many components He used to make all living things
நீர் என்பதற்கு நீங்கள் இதற்க்கு முந்திய கட்டுரையில் எழுதி இருப்பதை போல H2O ....அதாவது Hydrogen என்பதை ஆண் எனவும், Oxygen என்பதை பெண் எனவும் கொள்ளலாமே....மாறாக நீர் என்பதை H2O என்றே என் கருத வேண்டும்? அனைத்து உயிர்களையும் ஆணில் இருந்தும் பெண்ணில் இருந்தும் உருவாக்கினோம் என்று எல்லாம் வல்ல இறைவன் சொல்வதாக ஏன் பொருள் கொள்ள கூடாது?
வானம், பூமி, சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், சொர்க்கம், நரகம் இவற்றை எல்லாம் Living Things என்று அர்த்தம் கொள்ளத்தான் வேண்டுமோ?
அது போலவே அர்ஷ் என்பது போன்ற குறியீட்டு சொற்களுக்கு உட்பொருள் இருந்தே ஆக வேண்டுமோ?