காத்திருக்கையில்
எல்லோரிலும்
வந்து
போகின்றாய்...
ஒருமுறையாவது
என்னில்
வரக்கூடாதா நீ?
*
என்ன
விசித்திரமான நோய் இது?
இல்லாததைப்
பார்த்தபடி
இருப்பதைத்
தேடுகின்றார்கள்!
*
என்னில்
தெரியும்
உன் அடையாளங்களில்
தெரிகின்றாய்
நீ
’என்னில்
உன் அடையாளங்கள்
எப்படித்
தெரிகின்றன?’
என்றேன்
’என்னில்தான்
இருக்கின்றாய் நீ’
என்றாய்
*
பூந்தோட்டத்தில்
உலவுதல்
புத்துணர்ச்சிதான்
எனினும்
பசி வந்தபோதோ
பழத்தோட்டம்
சென்றுவிட்டேன்
*
எத்தனையோ
பேர்
நடந்து
சென்ற பாதைதான்
இருப்பதோ
ஒரேயொரு
காலடித்தடம்
*
‘எத்தகையது
உன் காதல்?’
என்றேன்
‘முச்சுடர்
விளக்கில்
மூழ்கும்
விட்டிலே!
ஒவ்வொரு
அறிதலும்
ஆயிரம்
புரிதல்
ஒவ்வொரு
புரிதலும்
ஆயிரம்
எரிதல்’
என்றாய்.
*
அருமை அருமை ஜஷாகல்லாஹ்
ReplyDelete