முடிவற்ற
இதழ்கள்
உதிராமல்
விரியும்
உன்
கருணையின்
காம்பில்
நதிக்கரையின்
நாணல்
உன்
நேசத்தில்
ஆகும்
புல்லாங்குழல்
இருளுக்குள்
ஓடி நான்
ஒளிந்த
இடமெல்லாம்
விழிகளால்
விளக்கேற்றினாய்
வெளியேறும்
எத்தனிப்பில்
படிமங்கள்
உதிர்க்கும்
உன் குறியீடு
நான்
மெல்ல
மெல்ல
உன் தூரிகை
உறிஞ்சும்
ஓவியம்
நான்
இசைச்சுழலின்
ஆழ் மையத்தில்
உன்னை
மீண்டும்
முத்தமிடுகிறேன்
பிதற்றுவேன்
உன் அன்பில்
மொழிப்பயன்
வேறெது?
நாட்குறிப்பு
எனது
கையெழுத்து
நினது
உன் ரகசியத்திற்கும்
தெரியாது
உன் ரகசியம்
என்னவென்று
சந்தித்துக்
கொள்கிறோம்
அந்தியைப்
போல் சில நேரம்
விடியலைப்
போல் சில நேரம்
a
No comments:
Post a Comment