Wednesday, February 9, 2011

சுகவரி



காதலி!
ஒன்றை மற்றொன்று 
கழுவித் தூய்மையாக்கும்
கைகளைப் போல் 
காதல் செய்கிறோம் நாம்!

ஒருகை தட்டினால் 
ஓசை இல்லை 
-முதுமொழி.

ஒருகை ஓசையைக்
கேட்டுவிட்டு வா
-ஜென் குருவின்
பொன்மொழி.

இரு கைகள்
தட்டும்போது
ஓசை வருவது
இதிலிருந்தும் அல்ல
அதிலிருந்தும் அல்ல.

இரு கைகளையும்
சூழ்ந்திருக்கும்
ஒன்றிலிருந்து.

ஆதாமைப் படைக்க
களிமண் பிசைந்த
இரண்டு கைகளின்
நிழல்களாய் நாம்
காதல் செய்கையில்...

சுயங்களில்
சுடரேற்றும்
சுகம்
என்னிலிருந்தும் அல்ல
உன்னிலிருந்தும் அல்ல.

இருவரையும்
அனைத்தையும்
சூழ்ந்திருக்கும்
ஏகத்திலிருந்து.




1 comment:

  1. //இரு கைகளையும்
    சூழ்ந்திருக்கும்
    ஒன்றிலிருந்து.//

    ஆம் அந்த ஒன்றிலிருந்துதான்!

    கவிதையை மீண்டும் மீண்டும் படித்தேன்.

    ReplyDelete