Wednesday, February 9, 2011

கவிச் சிற்பம்



செதுக்கி எறிந்த
கற் துகள்களாய்
வீழ்கின்றன
சொற்கள்.

வரிகளுக்கிடையில்
அரூபச் சிற்பங்கள்
வைக்கப்பட்டுள்ள
கூடம் இது.

தாளில் எழுதப்படுவது
கவிதை அல்ல
கவிதையின் மேப்.

கவிதைகளின்
தொகுப்புப் போல்
தெரிவது
ஒற்றைக் கவிதை ஒன்றின்
அகராதி.

அர்த்தங்களை
அகர வரிசையில்
தேடாதே.
அலைவரிசையில்
தேடு.

நிறைய துகள்கள்
சிறிய சிற்பம்.

குறைந்த துகள்கள்
பெரிய சிற்பம்.

உளி தொலையும் நாளில்
உருவாகி வரும்
சிற்பியையே
செதுக்கி எறிந்துவிட்ட
சிற்பம் ஒன்று.

 

1 comment:

  1. //அர்த்தங்களை
    அகர வரிசையில்
    தேடாதே.
    அலைவரிசையில்
    தேடு.//

    நம் அலை வரிசையிலேயே மிதக்கக்கூடிய ஜோடி அமைவது கடினம்.
    கவிதை நன்று

    ReplyDelete