Friday, December 17, 2010

நீராகி


'உருப்படவே மாட்டாய்' என்னும்
ஒருவாசகத்துக்கு உருகி உருகி
அருவம்போல் தத்தளிக்கும்
திரவம்போல் ஆனேன் நான்.

தண்ணீராய்
கண்ணீராய்
செந்நீராய்
பன்னீராய்
அவ்வப்போது என் 
அவதாரங்கள்.

தாகம் தீர்க்கவும்
சோகம் சேர்க்கவும்
புரட்சி ஆக்கவும்
வசந்தம் பூக்கவும்

அர்த்தமுள்ளதாய் 
ஆயிற்று என் வாழ்வு
ஒருபோதும் உருப்படாமல்.

  

1 comment:

  1. ///அர்த்தமுள்ளதாய்
    ஆயிற்று என் வாழ்வு
    ஒருபோதும் உருப்படாமல்.///

    Oh! What about ice?

    ReplyDelete