Wednesday, October 2, 2013

மௌனத்தின் உள்ளிசை


(கஸல் கவிதை வடிவத்தின் இயைபுச் சாயலில் பிறந்த தமிழ் கஸல் இது)

மௌனத்தின் உள்ளே
மறைந்த இசை
நினைத் தீண்டும் இன்பம்
நிறைந்த இசை

அரைக் கனவில் என்முன்
      அசைகின்றாள் அவள்
இறைக்குறிப்பு இதயத்தில்
வரைந்த இசை

வானம் வரை மட்டுமே
உனை அழைத்துச் செல்லும்
ஆன்மாவின் ஏக்கம்
குறைந்த இசை

திரை இட்ட முகம்
திறக்கின்ற நேரம்
மறை ஓதும் மனம்
கரைந்த இசை

எங்கிருந்து தீண்டியது
என்னை உன் மூச்சு
உருகத் தொடங்கியது உள்ளே
      உறைந்த இசை

2 comments:

  1. Heartening indeed.
    Wish Hariharan sing this at some time

    subbu thatha
    www.wallpaperwallpaper.blogspot.com

    ReplyDelete