Wednesday, March 2, 2011

கஜல் துளிகள்

பகலெல்லாம்
உன் நினைவுகள்
உறங்கும்
என் நெஞ்சில்.

இரவெல்லாம்
தூக்கம் இல்லை
உன் நினைவுகளால்.

~

மூச்சு உயிர் தொடும்
பேச்சு மௌனம் தொடும்
நீ மட்டும் இருக்கும்
தனிமையில்.

மூச்சும் பிசகும்
பேச்சும் பிசகும்
நீ இருந்தாலும்
சபையில்.

~

இனிய இசை கேட்டு
வெகு காலமாச்சு
உன் மூச்சால்
புல்லாங்குழலுக்கு
உயிரூட்டு.




வீணையில் உறங்கும் இசையை
வருடி எழுப்புகிறாய் நீ.
அதுவோ
அரை மயக்கத்தில் உலவும்
நீ தொட்ட போதையில்.

~

வாள் எடுத்து வரும்
உன் கையை
முத்தமிடக் குனிகிறேன்
தலையே போய்விடும்
அபாயத்தில்.

காதலனுக்கு
இன்பம்தான் ஏது
உயிரைக்  காத்துக்கொள்ளும்
உபாயத்தில்?

~

நாவுதானே
உச்சரிக்கின்றது
உன் பெயரை?

இதில்
காதலனுக்கு மட்டும் ஏன்
நாசியில் பெருமூச்சு?
விழிகளில் கண்ணீர்?

சரிதான்
காதலனுக்கு மட்டும்தானே
உன் நறுமணம்!
உன் தரிசனம்!

2 comments:

  1. //மூச்சு உயிர் தொடும்
    பேச்சு மௌனம் தொடும்//

    இந்த இரண்டு வரிகளும்
    என் மனம் தொட்டது.

    ReplyDelete
  2. //நாவுதானே
    உச்சரிக்கின்றது
    உன் பெயரை?//

    எந்த ருசிரா ராமா ஏமி ருசிரா
    ஸ்ரீ ராமா நீ நாமம் ஏனு ருசிரா?

    ஹே ராமா! உன் திருப்பெயர் எவ்வளவு ருசி, என்ன ருசி அப்பனே!

    ReplyDelete