மீண்டும் ஒரு நீண்ட இடைவெளி விடும்படி ஆகிவிட்டது.
என் மடிக்கணினி சில நாட்களாகவே மக்கார் செய்து வந்தது.
தட்டிக் கொண்டிருக்கும் போதே தானாகவே அணைந்துவிடுகிறது.
மீண்டும் மீண்டும் நினைவு தப்பிக் கோமாவில் விழும் ஒருவரைப் போல் அது இருந்தது.
'ஆட்டோ ரிப்பேர்' செய்து நானும் கொஞ்ச காலம் தட்டிக் கொண்டிருந்தேன். நன்றாகப் போய்க்கொண்டிருக்கும், திடீரென்று ஊடல் கொள்ளும்! பத்து மனைவிகளுக்குச் சமமாக ஊடல் கொள்ளும் ஒரு மடிக் கணினியை வைத்துக் கொண்டு நான் எப்படி ப்ளாக் நடத்துவது?
இப்போது என் மடிக் கணினி பணிமனையில் இருக்கிறது.
இப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் கல்லூரியில் என் துறையில் இருக்கும் ஒற்றைக் கணிப்பொறியைக் கொண்டுதான் நான் இடுகைகள் போடுவேன். அந்தக் கணிப்பொறியும் எப்படி இருந்தது என்று நான் சொல்லித்தான் ஆக வேண்டும். பத்து எய்ட்ஸ் நோயாளிகளைப் போல் இருந்தது அதன் நிலை. அவ்வளவு வைரஸ் தாக்குதல். அதனால் வேகத்தில் கம்ப்யூட்டர் தந்தை சார்ல்ஸ் பாப்பேஜ் கண்டுபிடுத்த இயந்திரத்துடன் போட்டிப் போட்டுக் கொண்டிருந்தது! அதை வைத்து ஒரு வருடம் வித்தை காட்டியிருக்கிறேன்! இப்போது அதற்கும் ஆப்பு வைத்துவிட்டார்கள். புதிய லேப் உருவாக்கித் தரும் பனி நடப்பதால் அதன் கனெக்ஷன் வயர்கள் எல்லாம் உருவப்பட்டு மூலைக்குப் போய்விட்டது.
முன்பே ஒருமுறை "மலரும் ரோஜா" என்று ஒரு கவிதையை ஏற்றிவிட்டு ஒருவார காலம் கம்பம் சென்றுவிட்டேன். "ரோஜா மலர்ந்து ரொம்ப நாளாச்சு. எங்கே அடுத்த பதிவு?" என்று அரபுத் தமிழன் கேட்டிருந்தார். விழுந்தடித்துக் கொண்டு அடுத்த இடுகையை ஏற்றினேன். ஆனால் இப்போது அப்படி ஏற்ற முடியாத நிலை. இன்னும் கொஞ்ச நாள் எடுக்கும் போல.
கல்லூரியில் ஒரு அற்புதமான சூபி விழாவை இந்த ஞாயிற்றுக் கிழமை நடத்தி முடித்தோம். மவ்லானா ரூமியின் 'மஸ்னவி' காவியம் தமிழாக்கத்தின் இரண்டாம் பாகம் வெளியீட்டு விழா. ஆறு பாகங்களையும் முழுமையாக மொழிபெயர்த்துத் தந்திருக்கும் பெரியவர் நரியம்பட்டு.எம்.ஏ.சலாம் அவர்கள் வந்திருந்தார்கள். விழாவில் மவ்லானா ரூமியின் பல கருத்துக்கள் எடுத்துக் கூறப்பட்டாலும், நண்பர் அபூதாகிர் ஜமாலி கூறிய ஒரு மேற்கோள் அனைவரின் மனதையும் ஈர்த்தது. உண்மையில் செயல்படுபவன் இறைவன்தான். ஆனால், மனிதர்கள் 'நான் செய்தேன்', நீ செய்தாய், அவன் செய்தான் என்றெல்லாம் பீற்றிக் கொள்கிறார்கள் என்னும் கருத்தை மிக அழகாகச் சொன்ன கவிதை வரிகளின் மேற்கோள். அது இது:
"வண்டியை
இழுப்பது என்னவோ
மாடுகள்தான்,
ஆனால்
சக்கரங்கள் கிடந்து
சத்தமிடுகின்றன."
ரூமி ரூமிதான்!
கணினியோடு மல்லுக்கு நிற்கிறீர்களா?
ReplyDeleteதொலைந்தது போங்கள்.
ரூமியைக் படித்து மலைத்து போயிருக்கிறேன்.
பின்னூட்டத்தில் வொர்ட் வெரிஃபிகேஷன் அவசியம் தானா?
ReplyDeleteஉங்களுக்காகக் காத்திருப்பதிலும் சுகம் இருக்கிறது :)
ReplyDeleteவாரம் ஒரு கட்டுரை ஒரு கவிதை என இரண்டு போதுமே.
இப்பத்தான் லேப் டாப்புலாம் சல்லிஸாக் கெடக்குதே :)
//"வண்டியைஇழுப்பது என்னவோமாடுகள்தான்,ஆனால்சக்கரங்கள் கிடந்துசத்தமிடுகின்றன."ரூமி ரூமிதான்!//
ReplyDeletesuper sir chance illa
sir neenga cumbama ?
ReplyDelete//"வண்டியை
ReplyDeleteஇழுப்பது என்னவோ
மாடுகள்தான்,
ஆனால்
சக்கரங்கள் கிடந்து
சத்தமிடுகின்றன."//
"எல்லாப்புகழும் இறைவனுக்கே!"
(எனக்கோ, உனக்கோ இல்லை)
வயால் சும்மா சொல்லலாம்.
மனதால்.....?