Saturday, August 24, 2019

ஐம்புகழ்


                             




























மூலவன் பண்டு
முதற்கோல் கொண்டு
வானேட்டில் வரைந்த
வேத வாசகம்

நாமம் போற்றிப் பின்
நாதனைப் போற்றி
ஐம்புகழ் ஓதும்
நாத வாசகம்

உலகம் யாவும்
தாமுள வாகிய
துமிகள் ஓதும்
தூயோன் துதிப்பு.

அழகன் அன்பன்
அவனின் தூதரின்
அகத்தில் எழுந்த
அருளின் உதிப்பு.

குறிப்பு: ”எல்லாப் புகழும் இறைவனுக்கே!” (’அல்ஹம்துலில்லாஹ்’ என்பதன் தமிழாக்கம். அஃது, திருக்குர்ஆனின் முதல் அத்தியாயத்து முதல் திருவசனத்தின் ஆரம்பச் சொற்றொடர்.) ’அல்ஹம்து’ என்பது அறபியில் ஐந்தெழுத்துச் சொல். (அச்சொல்லைத் தமிழில் எழுதினும், மொழிபெயர்த்துத் ’திருப்புகழ்’ எனினும் ஐந்தெழுத்தே)). அதுவே ஐம்புகழ் என்ப்பட்டது. ஐந்தெழுத்துப் புகழ் என்க.  

No comments:

Post a Comment