Monday, May 2, 2011

ரிட்டர்ன் டிக்கட்



பிறப்பு என்பது
யூ-டர்ன்.

இப்போது
என் வயது
x  - 34 

இறப்பில் 
சமன்பாடாகிவிடும்
பூஜ்யத்தொடு.

அதன்பின் 
வாழ்வுண்டு
வயதில்லை.

நேற்று அவர்
அறுபது வயதில்
இறந்தபோதுதான்
தெரிந்தது
அவர் பிறந்தபோது
அறுபது வயதாய்
இருந்த விவரம்.

அவனிடமிருந்து வந்தோம்
அவனிடமே
திரும்பிக் கொண்டிருக்கிறோம். 

4 comments:

  1. அட சூப்பரா இருக்கே இந்த அபோ....வ் டர்ன்

    ReplyDelete
  2. Factorisation ஐ வாழ்வோடு இணைத்து பார்த்திருக்கிறீர்களே..

    இது கம்பன் பாடாத சிந்தனை என்று வைரமுத்து ரோஜா பட பாடலில் (தனது சிந்தனையை பற்றி) சொல்வார்

    அது போல் இது ரூமி (ரஹ்) பாடாத சிந்தனை (உங்களது சிந்தனையை நான் சொல்கிறேன்)

    அருமை.. its turn me around..

    ReplyDelete
  3. பிறப்பு, இறப்பு
    மூப்பு, இளமை
    இருமைகளின் நிதர்சனம்.

    சின்ன ஆலம் விதையில் முழு மரமும் அடக்கப்படவில்லயா?

    very nice

    ReplyDelete