Saturday, May 7, 2011

கஸல் துளிகள்


மௌன ருது
அடைந்தேன்
சொற்கள்
பொம்மைகள் ஆகிவிட்டன.

~~~

தற்காலிகம்
நிரந்தரம்போல் தெரிகிறது
மனிதனின்
வாழ்க்கைக்கு முன்.

விட்டிலின் வாழ்க்கை
வரம்போல் தெரிகிறது
மனிதனின்
வாழ்க்கைக்கு முன்.

~~~



உன் நினைவுகள் ஒரு
மலைப்பாதை.
ஏற ஏறத்
தலை சுற்றுகிறது.

~~~


கண்ணின் பாவை...
பார்வை
பர்தா அணிந்துள்ளது.

~~~

உனக்காகக் காத்திருந்தேன்
காதல் கொண்ட 
கன்னிப் பெண்ணின்
ரகசியம் போல்.

~~~



கண்ணீர் மழை  
அதிகமாகும் போதெல்லாம்
என் சூரியனே!
உன் வரவையே
எதிர்பார்க்கிறேன். 

3 comments:

  1. அன்பு ரமீஸ், கொஞ்ச நாளாக சில புத்தக வேலைகளில் இருந்ததால் தொடர்பு கொள்ள முடியவில்லை. உங்கள் கட்டுரைகளத்தான் படித்துக் கொண்டிருக்கிறேன். மற்ற கட்டுரைகளையும் அனுப்பவும். கஸல் துளிகள் அருமை. குறிப்பாக மலைப்பாதை கவிதையும், கன்னிப் பெண்ணின் மௌனம் போல என்பதும்.
    அன்புடன்
    ரூமி

    ReplyDelete
  2. ///தற்காலிகம்
    நிரந்தரம்போல் தெரிகிறது
    மனிதனின்
    வாழ்க்கைக்கு முன்.

    விட்டிலின் வாழ்க்கை
    வரம்போல் தெரிகிறது
    மனிதனின்
    வாழ்க்கைக்கு முன்.///

    நெஞ்சைத்தொட்டன.
    நல்ல கவிதைகள்.

    ReplyDelete