Sunday, July 24, 2011

மொழியின் உலகம்




சூரியன் என்பதினும்
பிரம்மாண்டமாய் உள்ளது
நிலா என்னும் சொல்

நட்சத்திரம் என்பதும்
விண்மீன் என்பதும்
வேறு வேறு

பாஷை
பாடை ஆகவேண்டாம்
பழிக்குப் பழி
மொழிக்குப் பழி

தவளைக்கு
என் மொழியில்
தவக்களை
என்று பெயர்

மொழியின்
தவக்களை
கவிதை

மழலை மொழியில்
மழலைக்கு
என்ன பெயர்?

மழலை
மொழியா?

தமிழுக்கு
அமுதென்று பேர்…
பிற மொழிகளுக்கும் கூட
என் தமிழுக்கு
ஹாட்-டச் பர்கர்
என்றும் பேர்

தாய்-சேய்
என்பது போல்
உயிர்-மயிர்

மௌனம்
அழகான சொல்

சப்தங்கள் அல்ல
மௌனத்திற்கு ஆபத்து
மௌனம் என்னும் சொல்

கிணற்றுத் தவளை
மொழி அறியும்
பழைய குளத்தின் தவளை
வழி அறியும்

மொழி விளையாட்டில்
வெற்றி அரிது
அதுவும்
மானிட மொழியில்
அரிதரிது

மொழியில்
சாத்தியம் பெரிது
சத்தியம் அரிது



1 comment:

  1. //என் தமிழுக்கு
    ஹாட்-டச் பர்கர்
    என்றும் பேர்//

    விளங்கலையே!



    //மொழியில்
    சாத்தியம் பெரிது
    சத்தியம் அரிது//

    முக்காலும் உண்மை.

    ReplyDelete